ரக்பி விளையாட்டை ஊக்குவிக்க மைதானம் அமைக்க முயற்சி | தினகரன்


ரக்பி விளையாட்டை ஊக்குவிக்க மைதானம் அமைக்க முயற்சி

அம்பாறை மாவட்டத்தில் ரக்பி விளையாட்டினை ஊக்குவிக்கும் பொருட்டு பொருத்தமான மைதானத்தினை அமைக்க அம்பாறை மாவட்ட ரக்பி விளையாட்டு பயிற்றுவிப்பாளர் ஐ.எல்.எம்.பாயிஸ் விடுத்த வேண்டுகோளிற்கு அமைய மாகாண சபையின் முன்னாள் அமைச்சரும், கிழக்குமாகாண முன்பள்ளிகள் பணியகத்தின் பணிப்பாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை , சின்னப்பாலமுனை கடற்கரை திறந்தவெளியை ரக்பி மைதானமாக நிர்மாணிப்பதுக்கு தேவையான நடவடிக்கையை மேற்கொள்ளும் பொருட்டு 04ஆந் திகதி களவிஜயத்தினை மேற்கொண்டு பார்வையிட்டார்.

குறித்த மைதானத்தின் கள விஜயத்தில் பிரதேச செயலாளர் லியாகத் அலி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சட்டத்தரணி எம்.ஏ.அன்சில் ஆகியோருடன் பிரதேச சபை உறுப்பினர் ஐ.ஏ.சிறாஜ் ஆகியோருடன் ரக்பி வீரர்களும் கலந்துகொண்டனர்.

அம்பாறை மாவட்டத்திலிருந்து தேசிய மட்டத்துக்கு தெரிவு செய்யப்பட்ட அணியொன்றுக்கு விளையாட்டு பயிற்சிகளை மேற்கொள்வதற்கு பொருத்தமான மைதானம் இல்லாமலிருப்பது கவலை தருவதாக பயிற்றுவிப்பாளர் ஐ.எல். பாயிஸ் வருகைதந்த அரசியல்வாதிகள், அதிகாரிகளிடம் இதன்போது தெரித்தார்.

குறித்த இடத்தை அடையாளப்படுத்தி உரிய ஆவணங்களை தயாரித்து தருமாறும் கிழக்கு மாகாண ஆளுநரிடம் பேசி மைதானம் அமைப்பதற்குரிய நடவடிக்கையினை தான் மேற்கொள்வதாக இதன்போது கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

ஒலுவில் மத்திய விசேட நிருபர்


Add new comment

Or log in with...