இறால் வளர்ப்பு ஊக்குவிப்புக்கு தாய்லாந்துடன் இலங்கை ஒப்பந்தம் | தினகரன்

இறால் வளர்ப்பு ஊக்குவிப்புக்கு தாய்லாந்துடன் இலங்கை ஒப்பந்தம்

இறால் வளர்ப்பை ஊக்குவிக்கும் முகமாக இலங்கை மற்றும் தாய்லாந்து நாடுகளுக்கிடையில் விசேட ஒப்பந்தமொன்று அண்மையில் கைச்சாத்திடப்பட்டது. 

இலங்கை அரசு சார்பில் ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக நலன்புரி அமைச்சர் தயா கமகேயும் தாய்லாந்து அரசாங்கம் சார்பில் இலங்கைக்கான தாய்லாந்து தூதுவர் சி.சுலாமனியும் (Chulamanee Chartsuwan) இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர்.  

இந்த ஒப்பந்தத்தில் தாய்லாந்தில் முன்னணி வகிக்கும் இறால் வளர்ப்பு நிறுவனமான சி.பி நிறுவனமும் இலங்கையில் முன்னணி வகிக்கும் இறால் வளர்ப்பு நிறுவனமான கிங் எக்குவா நிறுவனமுமே இந்த ஒப்பந்தத்துக்குள் உள்வாங்கப்பட்டுள்ளன. 

இந்த ஒப்பந்தம் மூலம் இறால் வளர்ப்பு தொடர்பில் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்தல், முதலீடு, சந்தைப்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் முன்னெடுக்கப்படுமென கிங் எக்குவா நிறுவனத்தின் தலைவர் எஸ்.தயாபரன் தெரிவித்தார். 

இந்த ஒப்பந்தத்துக்கமைய தாய்லாந்து நிறுவனம் முதற்கட்டமாக 15 மில்லியன் ரூபாவை முதலீடு செய்யுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  


Add new comment

Or log in with...