3,000 யூவானில் ஆரம்பித்த நிறுவனம் 2019 இல் 100 பில். $ எதிர்பார்ப்பு | தினகரன்

3,000 யூவானில் ஆரம்பித்த நிறுவனம் 2019 இல் 100 பில். $ எதிர்பார்ப்பு

3,000 யூவானில் ஆரம்பித்த நிறுவனம் 2019 இல் 100 பில். $ எதிர்பார்ப்பு-Huawei CEO and Founder expects Revenue to touch US $ 125 Bn in 2019

Huawei நிறுவனம் அடுத்து வரும் 5 ஆண்டுகளில் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி தொடர்பில் 100 பில்லியன் அமெரிக்க டொலர் தொகையை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக Huawei நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியூம், ஸ்தாபகருமான ரென் தெரிவித்துள்ளார்

3,000 யூவானில் ஆரம்பித்த நிறுவனம் 2019 இல் 100 பில். $ எதிர்பார்ப்பு-Huawei CEO and Founder expects Revenue to touch US $ 125 Bn in 2019

Huawei நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியூம், ஸ்தாபகருமான ரென் ஸெங்பெய் 2019 ஆனது Huawei நிறுவனத்தைப் பொறுத்தவரையில் கடினமான ஒரு ஆண்டாக அமையவூள்ள போதிலும், மொத்த ஆண்டிலும் 125 பில்லியன் அமெரிக்க டொலர் தொகையை வருவாயாக ஈட்டும் இலக்கினை நிறுவனம் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 2018 ஆம் ஆண்டில் Huawei நிறுவனம் ஈட்டியூள்ள மொத்த வருமானத் தொகையை அது இன்னமும் உத்தியோகப+ர்வமாக வெளியிடாத போதிலும், தொழில்நுட்ப பெரு நிறுவனத்தின் சுழற்சி அடிப்பிடையிலான பணிப்பாளர் சபைத் தலைவர்களுள் ஒருவரான எரிக் ஸஷு 2018 நவம்பரில் அதன் விற்பனைத் தொகையானது 100 பில்லியன் அமெரிக்க டொலர் தொகையைக் கடக்கும் என அவர் அண்மையில் பத்திரிகையாளர்கள் மத்தியில் குறிப்பிட்டுள்ளார்.

'2019 ஆம் ஆண்டில் சர்வதேச சந்தைகளில் சவால்களுக்கும், கஷ்டங்களுக்கும் நாம் முகங்கொடுக்க நேரிடலாம். அதனாலேயே அடுத்த ஆண்டில் எமது வளர்ச்சியானது 20 சதவீதத்திலும் குறைவாகவே அமையூம் என நான் குறிப்பிடுகின்றேன்," என்று ரென் குறிப்பிட்டார். மிகவூம் அரிதான ஒரு நிகழ்வாக, சர்வதேச ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்ட ரென் ஸெங்பெய், நிறுவனத்தின் சாதனங்களுக்கு இடமளிப்பதால் சீன அரசாங்கம் தனது தேசத்தின் தொலைத் தொடர்பாடல் வலையமைப்பிற்குள் பின்கதவால் ஊடுருவூம் என்று அமெரிக்க அரசால் எழுப்பப்பட்டுள்ள அச்சம் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளித்துள்ளார். மன்டரின் மொழியில் உரையாடிய ரென், நிறுவனத்தின் மொழி பெயர்ப்பாளர் ஒருவரின் உதவியின் மூலமாக Huawei நிறுவனம் தரவூ விபரங்கள் எவற்றையூம் ஒரு போதும் பீஜிங்கிடம் கையளிக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.

3,000 யூவானில் ஆரம்பித்த நிறுவனம் 2019 இல் 100 பில். $ எதிர்பார்ப்பு-Huawei CEO and Founder expects Revenue to touch US $ 125 Bn in 2019

ஊடகவியலாளர்கள் மத்தியில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த ரென் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக Huawei உற்பத்திகள் 170 இற்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் ஒட்டுமொத்தமாக 3 பில்லியனுக்கும் அதிகமான பாவனையாளர்களுக்கு சேவைகளை வழங்கியூள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

'ஒட்டுமொத்தமாக, 87,805 காப்புரிமைகளை நாம் வழங்கியூள்ளோம். அமெரிக்காவில் 11,152 முக்கிய தொழில்நுட்ப காப்புரிமைகளை நாம் பதிவூ செய்துள்ளோம். 360 இற்கும் மேற்பட்ட தரக்கட்டளை அமைப்புக்களில் நாம் தீவிரமாக பங்கேற்றுள்ளதுடன், 54,000 இற்கும் மேற்பட்ட திட்டங்களை முன்வைத்துள்ளோம்." என்று ரென் குறிப்பிட்டார்.

'மக்கள் ஈற்றிலே Huawei இனை தெரிவூ செய்யூம் நாடுகள் மற்றும் Huawei உடன் இணைந்து செயற்படாத நாடுகள் ஆகியவற்றுக்கு இடையில் தமது சொந்த ஒப்பீட்டை மேற்கொள்வர்" என தான் நம்புவதாக குறிப்பிட்டார்.

'இது எவ்வாறு இருப்பினும், அவர்களுடைய தெரிவை எம்மால் எந்த வழியிலும் கட்டுப்படுத்த முடியாது." என்று குறிப்பிட்;ட ரென் 5G தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரையில், தற்போது வரை 30 இற்கும் மேற்பட்ட வர்த்தக ஒப்பந்தங்களில் Huawei கைச்சாத்திட்டுள்ளதாகவூம், ஏற்கனவே 25,000 5G தள மையங்களை ஏற்றுமதி செய்துள்ளதாகவூம் குறிப்பிட்டார்.

'2,570 காப்புரிமைகளை நாம் கொண்டுள்ளோம். மிகவூம் ஈர்க்கின்ற உற்பத்திகளை நாம் அபிவிருத்தி செய்யூம் பட்சத்தில், அவற்றை வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் காத்திருக்கின்றனர்.' என்று அவர் குறிப்பிட்டார்.

'இணையப் பாதுகாப்பு மற்றும் அந்தரங்க பாதுகாப்பு ஆகியவற்றைக் கருதுகையில், எமது வாடிக்கையாளர்களின் நலன் மீது நாம் அக்கறை கொண்டுள்ளோம். எந்த தேசத்திற்கும் அல்லது எந்த நபருக்கும் தீங்கினை நாம் ஒரு போதும் விளைவிக்க மாட்டோம்" என்று சீனா, ஷென்ஸென் நகரிலுள்ள Huawei இன் தலைமையலுவலகத்தில் திரண்டிருந்த ஊடகவியலாளர்கள் மத்தியில் ரென் குறிப்பிட்டார்.

'எந்தவொரு நிறுவனத்திலும் பின்கதவால் கட்டாயமாக ஊடுருவ வேண்டிய தேவை அல்லது சட்டம் சீனாவில் கிடையாது என, சீன வெளி விவகார அமைச்சு உத்தியோகப+ர்வமாக உறுதிப்படுத்தியூள்ளது. முறையற்ற தகவல் விபரங்களை பகிர்ந்து கொள்ளுமாறு எந்தவொரு அரசாங்கத்திடமிருந்தும் Huawei நிறுவனத்திற்கோ அல்லது தனிப்பட்ட ரீதியிலோ எவ்விதமான கோரிக்கையூம் கிடைக்கப்பெறவில்லை." என ரென் குறிப்பிட்டார்.

'எந்தவொரு வர்த்தக நிறுவனத்திலும் வாடிக்கையாளர்களை முன்னிலைப்படுத்துவதும், வாடிக்கையாளர்களை மையப்படுத்துவதே அதன் பெறுமானத்தை தீர்மானிப்பதாக அமைகின்றன. நாம் ஒரு வர்த்தக நிறுவனம், ஆகவே வர்த்தக விதிமுறைகளை நாம் பின்பற்றுதல் வேண்டும். இதன் பின்னணியில் எனது தனிப்பட்ட அரசியல் நம்பிக்கை மற்றும் எமது வர்த்தக நடவடிக்கைகள் ஆகியவற்றுக்கு இடையில் நெருங்கிய தொடர்பு இருப்பதை நான் காணவில்லை, ஒரு வர்த்தக நிறுவனம் என்ற ரீதியிலேயே நாம் அதனை அணுக வேண்டும். இது தொடர்பில் நான் ஏற்கனவே தௌpவூபடுத்தியூள்ளதுடன், அத்தகைய ஒரு கோரிக்கை விடுக்கப்படவில்லை என்பதை நான் நிச்சயமாக கூறிக்கொள்ள விரும்புகின்றேன்." என்று சீனாவின் ஆளும் தரப்புடன் அவர் கொண்டுள்ள தொடர்புகள் எந்த வகையான தரவூ கோரிக்கைக்கும் எதிராக அவர் செயற்பட இடமளிக்குமா என ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு ரென் அவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

நாம் ஸ்தாபிக்கப்பட்ட காலம் தொட்டே Huawei இன் வர்த்தகத் தொழிற்பாடுகளில் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய கொள்கைகளை முக்கியமானதாக கொண்டு வந்துள்ளோம். எமது வாடிக்கையாளர்களின் நலனைப் பாதிக்கின்ற எந்த செயற்பாட்டையூம் நாம் ஒரு போதும் முன்னெடுக்க மாட்டோம்.

Huawei இன்னமும் தனியார் உரிமையாண்மையின் கீழான ஒரு நிறுவனமாக காணப்படுகின்றமைக்கான காரணத்தை ஊடகவியலாளர்கள் கேட்ட போது, பொது உடமை நிறுவனங்கள் வலுவானதாகவூம், பாரியதாகவூம் மாற்றம் கண்டமை தொடர்பில் ஒரு சில வெற்றிகரமான வரலாறுகள் மட்டுமே உள்ளதாக தான் எண்ணுவதாக ரென் குறிப்பிட்டார்.

'மூலதனம் என்பது பேராசைக்கு வித்திடுகின்றது. எங்கெல்லாம் உடனடி பிரதிபலன் கிடைக்கின்றதோ அங்கெல்லாம் மூலதனம் இடப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளதுடன், அது நிச்சயமாக நீண்ட கால நோக்கங்களை கருத்தில் கொள்வதாக அமைதல் வேண்டும். நாம் ஒரு தனியார் நிறுவனம். ஆகவே எமது நீண்ட கால சிந்தனைகள் தொடர்பில் நாம் தொடர்ந்தும் தீவிர         அர்ப்பணிப்புடன் உள்ளோம்" என்று ரென் குறிப்பிட்டார்.

'நூற்றுக்கணக்கான ஊழியர்களுடன் ஒப்பீட்டளவில் ஒரு சிறிய நிறுவனமாக செயற்பட ஆரம்பித்த நாம், எமது முயற்சிகள் அனைத்தும் ஒரே திசையில் அமைவதில் கவனம் செலுத்தியூள்ளோம். நாம் பாரிய நிறுவனமாக வளர்ச்சி கண்ட போதும், பல்லாயிரக்கணக்கான அல்லது இன்று 100,000 இற்கும் மேலான ஊழியர்களைக் கொண்ட அளவிற்கு உயர்ச்சி கண்டுள்ள நிலையிலும், நாம் தொடர்ந்தும் அதே இலக்கில் கவனம் செலுத்துவதை பேணி வந்துள்ளோம்." என்று ரென் வலியூறுத்தினார்.

ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மீது Huawei இன் வருடாந்த முதலீடானது 15 முதல் 20 பில்லியன் அமெரிக்க டொலர் தொகையை எட்டியூள்ளதுடன், அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளில், ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மீது 100 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான தொகையை Huawei முதலீடு செய்யவூள்ளதாகவூம் அவர் குறிப்பிட்டார்.

'இந்நிறுவனத்தின் ஸ்தாபகர் நானே. Huawei நிறுவனத்தை ஸ்தாபிக்க விரும்பிய காலகட்டத்தில், என்னிடம் போதியளவூ பணம் கையிலிருக்கவில்லை. நான் இராணுவத்திலிருந்து விலகிய போது எனக்கும், எனது மனைவிக்கும் இராணுவத்திடமிருந்து இழப்பீடாக 3,000 சீன யூவான் தொகை கிடைக்கப்பெற்றது. அச்சமயத்தில் ஷென்ஸென் நகரில் நிறுவனம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு பதிவூ செய்யப்பட்ட மூலதனத் தொகையாக குறைந்தபட்சம் 20,000 சீன யூவான் தேவைப்பட்டது. பலரிடமிருந்து பெறப்பட்ட நிதியைக் கொண்டு Huawei நிறுவனத்தை பதிவூ செய்வதற்கு 21,000 சீன யூவான் தொகையை திரட்ட என்னால் முடிந்தது." என்று ரென் குறிப்பிட்டார்.

'இன்று Huawei இல் நான் தனிப்பட்டரீதியில் 1.14% பங்கினை மட்டுமே கொண்டுள்ளேன். அப்பிள் நிறுவனத்தில் 0.58% பங்குகளை மட்டுமே ஸ்டீவ் ஜொப்ஸ் கொண்டிருந்தார். எனது பங்கினை இன்னமும் குறைத்துக் கொள்ள இடமுண்டு என்பதையே இது பிரதிபலிக்கின்றது. ஸ்டீவ் ஜொப்ஸ் இடமிருந்து நான் கற்றுக்கொள்ள வேண்டும்." என ரென் சுவாரஸ்யமாக குறிப்பிட்டார்.


Add new comment

Or log in with...