நடிகைகளின் அரைகுறை ஆடை பற்றி விமர்சித்த எஸ்.பி | தினகரன்


நடிகைகளின் அரைகுறை ஆடை பற்றி விமர்சித்த எஸ்.பி

சினிமா விழாக்களுக்கு நடிகைகள் அரைகுறை ஆடையில் வருவது பற்றி விமர்சித்த பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தை பலரும் விளாசியுள்ளனர். திருப்பதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சினிமா விழாக்களுக்கு நடிகைகள் அணிந்து வரும் உடை பற்றி விமர்சித்தார்.

அந்த நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது, சினிமா விழாக்களுக்கு எந்த வகையான உடைகள் அணிய வேண்டும் என்று நடிகைகளுக்கு தெரியவில்லை. உடம்பை காட்டும் உடைகளை அணிந்தால் தான் ஹீரோக்களும் இயக்குனர்களும் வாய்ப்பு அளிப்பார்கள் என்று நினைக்கிறார்களோ?

உடை பற்றிய என் கமெண்ட்டால் அவர்கள் கோபம் அடைந்தாலும் கவலை இல்லை. தற்போதுள்ள ஹீரோயின்களுக்கு தெலுங்கு தெரியாது. அதனால் என் கருத்தை தவறாக புரிந்து கொண்டாலும் கவலை இல்லை என்றார் எஸ்.பி. பாலசுப்பிரமணியம்.தெலுங்கு நடிகரும் தயாரிப்பாளருமான நாகபாபு எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தை விளாசி பேட்டி அளித்துள்ளார்.

நாம் ஜனநாயக நாட்டில் வசிக்கிறோம். பெண்கள் எப்படி உடை அணிய வேண்டும், அணியக் கூடாது என்று சொல்லும் உரிமை யாருக்கும் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார். நடிகைகள் எப்படி உடை அணிந்தால் என்ன, எஸ்.பி.பி. ஏன் அதை பற்றி எல்லாம் பேசி சர்ச்சையில் சிக்க வேண்டும் என்று அவரின் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.


Add new comment

Or log in with...