துப்பாக்கிகளுடன் மூவர் கைது | தினகரன்

துப்பாக்கிகளுடன் மூவர் கைது

உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உற்பத்தி செய்யப்பட்ட  மூன்று துப்பாக்கிகளுடன் மூன்று சந்தேக நபர்களை எம்பிலிபிட்டிய பொலிஸார் கைது  நேற்றுமுன்தினம் செய்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து வீடொன்றை சுற்றி வளைத்த பொலிஸார் இவற்றை கைப்பற்றியதுடன்  இவ்விடயத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களையும்  கைதுசெய்துள்ளனர்.

இவர்கள் எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 37, 42, 50  வயதுகளை சேர்ந்த இவர்கள்  மோட்டார் வாகன வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள்  எனவும் இவர்கள் பாரதூரமான குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றவர்கள்  என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இரத்தினபுரி சுழற்சி நிருபர்


Add new comment

Or log in with...