இராமர் பாலம் என்பது வெறும் கட்டுக்கதை அல்ல! | தினகரன்

இராமர் பாலம் என்பது வெறும் கட்டுக்கதை அல்ல!

நாசா செயற்கைக்ேகாள் ஆதாரங்களுடன் வெளிவரும் உண்மை

இந்தியாவில் இருந்து இராமர், பாலம் அமைத்து தனது படைகளுடன் இலங்கை சென்றார். அங்கு இராவணணுடன் போரிட்டு, கடத்திச் செல்லப்பட்ட தனது மனைவி சீதாவை இராமர் மீட்டார்.

இதன் கதையை 'இராமாயணம்' என்று வால்மீகி எழுதியுள்ளார். இந்தியாவில் பல்வேறு மொழிகளில் இராமாயணம் உள்ளது. இதை தமிழில் கம்பர் எழுதியதால் 'கம்பராமாயணம்' என்று அழைக்கப்படுகிறது.

இந்தியாவையும் இலங்கையும் இணைக்கும் விதமாக மணல் மற்றும் பாறைக் கற்களால் பாலம் போன்று கட்டப்பட்டதை போல் தென்பட்டு வந்தது. இப்பாலம் தனுஸ்கோடி முதல் தலைமன்னார் வரை இருந்தது என்று கூறப்படுகிறது. இதை ஒரு சிலர் 'ஆதாம் பாலம்' என்றும் 'இராமர் பாலம்' என்று நம்பி வந்தனர். ஒரு சிலர் இயற்கையாக உருவான மணல் மேடு என்று கூறி வந்தனர். இதனால் பொதுமக்கள் மத்தியில் இராமர் பாலம் குறித்து கருத்துமோதலுக்கு பஞ்சம் ஏற்பட்டதில்லை.

இராமர் பாலம் குறித்து பல்வேறு ஆய்வுகள் நடந்தன. இது இயற்கையான மணல் மேடா இல்லை இராமர் படைகளுடன் செல்லும் போது உருவாக்கப்பட்டதா என்று சந்தேகம் நிலவி வந்தது.இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த 'சயன்ஸ் சேனல்' நடத்திய ஆய்வில் இராமர் பாலம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இராமர் பாலம் 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது எனவும் இதை மனிதர்கள்தான் கட்டியுள்ளனர் என்றும் ஆய்வுகளின் முடிவின்படி 'சயன்ஸ் சேனல்'அதிகாரபூர்வமாக அறிவித்தது. மேலும் 'நாசா' விண்வெளி ஆய்வு மைய அதிநவீன செயற்கைக்கோள் உதவியுடன் வீடியோவையும் வெளியிட்டது. ஆய்வின்படி எடுக்கப்பட்ட கற்கள் மற்றும் மணல் மேடு குறித்து வெளிநாட்டு ஆராய்சியாளர்கள் கூறியதாவது:

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே பாலம் இருந்துள்ளது. மணல் மற்றும் கிடைத்த கற்களை பார்க்கும் போது, இராமர் பாலம் அமைக்கப்பட்ட பிறகே மணல் மேடு ஏற்பட்டுள்ளது. மணல் மேடுகளின் வயது சுமார் 7 ஆயிரம் ஆண்டுகள் ப​ைழமையாவை.

இவ்வாறு அந்த வீடியோ தொகுப்பில் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.இதில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே இராமர் பாலம் இருப்பது குறித்து தெளிவாக காட்டியது. துல்லியமான அதிநவீன செயற்கைக்கோள் உதவியுடன் இராமர் பாலம் இருப்பதை காண முடிந்தது. மேலும் அந்த வீடியோ இந்தியா முழுவதும் அல்லாமல் உலம் முழுக்க பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Add new comment

Or log in with...