சில நாட்களுக்கு காற்றுடனான காலநிலை | தினகரன்


சில நாட்களுக்கு காற்றுடனான காலநிலை

பிற்பகலில் மழை

அடுத்த சில நாட்களுக்கு (குறிப்பாக 11ஆம் திகதியிலிருந்து 13ஆம் திகதிவரை) நாட்டிலும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் காற்றுடன் கூடிய நிலைமை சற்று அதிகரித்துக் காணப்படுமென்று எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேல்,  சப்ரகமுவ,  மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பி.ப. 2.00மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது

இதேவேளை, கிழக்குக் கரையோரப் பகுதிகளில் காலை வேளையில் மழை பெய்யக்கூடுமென்றும் எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மேற்படி பிரதேசங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்று வீசக்கூடுமெனவும் தெரிவித்துள்ள வளிமண்டலவியல் திணைக்களம், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.


Add new comment

Or log in with...