சுவாமி விபுலானந்தரின் மருமகள் காரைதீவில் காலமானார் | தினகரன்

சுவாமி விபுலானந்தரின் மருமகள் காரைதீவில் காலமானார்

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் மருமகளான திருமதி கோமேதகவல்லி செல்லத்துரை தனது 92வது வயதில் நேற்று (8) வெள்ளிக்கிழமை காரைதீவில் காலமானார். ஓய்வுநிலை அதிபரான திருமதி கோமேதகவல்லி செல்லத்துரை  1926.06.06 ஆம் திகதி பிறந்தவர். அவரை பொதுவாக கண்ணம்மாக்கா என அழைப்பதுண்டு.

சுவாமி விபுலானந்த அடிகளாருக்கு இரு சகோதரிகள் உள்ளனர். மரகதவல்லி, அமிர்தவல்லி என இரு சகோதரிகள் இருந்தனர்.

அவர்களில் மரகதவல்லி என்ற சகோதரிக்கு 5 பிள்ளைகள். காலஞ்சென்ற சுந்தரம்பிள்ளை, காலஞ்சென்ற விவேகானந்தராஜா தற்போது காலஞ்சென்ற கோமேதகவல்லி, காலஞ்சென்ற சதாசிவம், பொறியிலாளர் கணேசன் ஆகியோராவார்.

மரகதவல்லியின் ஒரேயொரு மகளான கோமேதகவல்லிக்கு (கண்ணம்மா) ஓய்வுநிலை ஆசிரியை விஜயலக்ஸ்மி, பொறியியலாளர் மகேசன், காலஞ்சென்ற நடேசன் எனும் பிள்ளைகள். அவரது கணவர் செல்லத்துரை 1990 களில் காலமானார்.

காலஞ்சென்ற கோமேதகவல்லியின் இறுதிக் கிரியைகள் இன்று(9) மாலை 4 மணியளவில் காரைதீவு இந்து மயானத்தில் நடைபெறும் என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

காரைதீவு குறூப் நிருபர்


Add new comment

Or log in with...