தமிழக பட்ஜெட் உதவாக்கரை | தினகரன்


தமிழக பட்ஜெட் உதவாக்கரை

சங்கீத வித்வான் போல ஓபிஎஸ் வாசித்தார்

தமிழக அரசின் பட்ஜெட் உதவாக்கரை பட்ஜெட் என எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

2019 -20-ம் நிதி ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் 8வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். மக்களவை தேர்தல் காரணமாக முன்கூட்டியே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

தமிழக பட்ஜெட் குறித்து மு.க.ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

ஏழை, எளிய மக்களுக்கு பயன்படாத வகையில் தமிழக பட்ஜெட் உள்ளது. வேலைவாய்ப்புகளை பெருக்கும் வகையில் எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை.

கொடநாட்டில் கொள்ளையடித்தது போல தமிழகத்தை கொள்ளையடிக்கும் வகையில் பட்ஜெட் உள்ளது. விவசாயிகளுக்காகவும் அரசின் வருவாயை பெருக்குவதற்காகவும் பட்ஜெட்டில் எந்தத் திட்டமும் இல்லை.

அரச ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து இந்த பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

சங்கீத வித்வான் போல நிதியமைச்சர் ஓபிஎஸ் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லி இருக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.


Add new comment

Or log in with...