தற்கொலைக்கு உதவிய தோழி குற்றவாளியாக நீதிமன்றில் உறுதி | தினகரன்


தற்கொலைக்கு உதவிய தோழி குற்றவாளியாக நீதிமன்றில் உறுதி

அமெரிக்காவில் ஆண் நண்பரின் தற்கொலைக்கு உதவிய 17 வயது இளம்பெண் குற்றவாளி என மசாசுசெட்ஸ் நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. கான்ராட் ரோய் என்ற 18 வயதான நபர், கடந்த 2014ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். தமது ஆண் நண்பர் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகக் கூறியதும் 17 வயதான தோழி தற்கொலை செய்வதற்கான வழிமுறைகள், ஆலோசனைகள் குறித்து அவரிடம் எடுத்துக் கூறியுள்ளார்.

தற்கொலைக்கு இதுவே சரியான நேரம், தயாராகு என்று அந்த பெண் குறுஞ்செய்தி அனுப்பியதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் 17 வயதான அவரது தோழி ஒருவரை குற்றவாளி என ஏற்கனவே கீழ் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டிலும் அவரது குற்றத்தை மசாசுசெட்ஸ் நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. தற்போது 22 வயதான அப்பெண் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.


Add new comment

Or log in with...