களனி பிரீஸர் மின்விசிறிகள் அறிமுகம் | தினகரன்

களனி பிரீஸர் மின்விசிறிகள் அறிமுகம்

பாதுகாப்பான இலத்திரனியல் மற்றும் தொடர்பாடல் கேபல்கள் உற்பத்தியாளரான களனி கேபல்ஸ் பிஎல்சி நிறுவனம் களனி பிரீஸர் எனும் வர்த்தக நாமத்தில் புதிய மின்விசிறிகளை அண்மையில் அறிமுகப்படுத்தியது.  

இதன் அறிமுகவிழா களனி கேபள்ஸ் பிஎல்சியின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மஹிந்த சரணபால தலைமையில் நடைபெற்றது. அறிமுகப்படுத்தப்பட்ட மின்விசிறிகளை டெகோஸா எலக்ரிக்கல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் டி.வி. பிரசன்ன விதானகே கொள்வனவு செய்தார். களனி உற்பத்திகளை விற்பனை செய்வதில் டெகோஸா நிறுவனம் இணைந்து செயற்பட்டு வருகிறது.  

இந்தியாவின் முதற்தர மின்சாதனங்கள் மற்றும் மின்விசிறி உற்பத்தியாளரான ஹவெல்ஸ் நிறுவனம் இலங்கை சந்தைக்குத் தேவையான வகையில் களனி பிரீஸர் மின்விசிறிகளை தயாரித்து வழங்குகிறது.   குறைந்த மின்சார வோல்ட் அளவுகளிலும் இயங்கும் வகையில் இது தயாரிக்கப்பட்டிருப்பதுடன், இரண்டு வருட உத்தரவாதமும் வழங்கப்படுகிறது. இலகுவில் துருப்பிடிக்காத வகையிலும், நிறம்மாறாத வகையிலும் மோட்டாரின் மேற்பகுதி அலுமினியத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது. 

களனி கேபல்ஸ் பிஎல்.சி நிறுவனத்தில் மற்றுமொரு உற்பத்தி இணைந்துகொண்டிருப்பதானது ஒட்டுமொத்த விற்பனைக்கு வலுச்சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது என அந்நிறுவுனத்தின் பொது முகாமையாளர் அனில் முனசிங்க தெரிவித்தார். 

எதிர்வரும் மாதங்களில் புதிய உள்ளடக்கங்களுடன் மின்விசிறி மீளஅறிமுகம் செய்யப்படும் என்றும் குறிப்பிட்டார். 


Add new comment

Or log in with...