வெலே சுதாவின் முறையீட்டு மனு; பெப்ரவரி 15ல் விசாரணை | தினகரன்

வெலே சுதாவின் முறையீட்டு மனு; பெப்ரவரி 15ல் விசாரணை

போதைவஸ்து கடத்தல் தொடர்பான இரண்டு குற்றச்சாட்டுக்களில் குற்றவாளியாகக் காணப்பட்டு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட வெலே சுதா எனப்படும் கம்பொல விதானகே சமந்த குமார தாக்கல் செய்திருந்த முறையீட்டு மனு எதிர்வரும் பெப்ரவரி 15ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று கூறியது.  

போதைவஸ்து கடத்தல்காரரென சந்தேகிக்கப்படும் வெலே சுதா எனப்படும் மேற்படி நபர் 2008ஆம் வருடம் கல்கிசையில் வைத்து தம்வசம் 7,05 கிராம் ஹெரோயின் வைத்திருந்த போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அவரை குற்றவாளியாகக்கண்டு கொழும்பு மேல் நீதிமன்றம் அவருக்கு 2015 அக்டோபர் 14ஆம் திகதி மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இந்த மரண தண்டனை தீர்ப்புக்கு எதிராகவே அவர் முறையீட்டு மனுவை மேன்முறையீட்டு நிதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார்.    


Add new comment

Or log in with...