பல்வேறு குற்றங்கள்;108 பேர் கைது | தினகரன்

பல்வேறு குற்றங்கள்;108 பேர் கைது

தங்காலை குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் கடந்த 02 மற்றும் 03 ஆம் திகதிகளில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் மற்றும் சுற்றிவளைப்புகளின் போது பல்வேறு குற்றங்களக்காக 108 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தங்காலை பொலிஸார் தெரிவித்தனர்.   இந்த இரண்டு தினங்களிலும் மதுபோதையில் வாகனம் செலுத்திய 74 பேரும், பல்வேறு குற்றங்களுக்காக 34 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதோடு சந்தேக நபர்கள் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

ஹம்பாந்தோட்டை குறுாப் நிருபர்  


Add new comment

Or log in with...