400 கிலோ கஞ்சா வேனில் கடத்தல்; நால்வர் கைது (UPDATE) | தினகரன்

400 கிலோ கஞ்சா வேனில் கடத்தல்; நால்வர் கைது (UPDATE)

400 கிலோ கஞ்சா வேனில் கடத்தல்; நால்வர் கைது (UPDATE)-4 Arrested With 400kg Kerala Kanja

ரூபா 4 கோடிக்கும் அதிக பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று (08) அதிகாலை பேலியகொடை பிரதேசத்தில் வைத்து,  வேனில் கடத்திச் செல்லப்பட்ட, 400 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தாரர்.

குறித்த கஞ்சா போதை பொருளை இந்தியாவில் இருந்து படகு மூலமாக சிலாபம் கடல் வழியாக சிலாபம் நோக்கி கொண்டு வந்துள்ளதோடு அங்கிருந்து சிறு படகு மூலம் வத்தளை, எலக்கந்தை பிரதேசத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கிருந்து வேன் மூலமாக கொழும்புக்கு கொண்டுவரப்பட்ட வேளையில் பேலியகொடை பழைய பாலத்திற்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

திட்டமிடப்பட்ட குற்ற தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த கஞ்சா போதைப் பொருள் மீட்க்பபட்டுள்ளதோடு, அதனை கடத்திச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

400 கிலோ கஞ்சா வேனில் கடத்தல்; நால்வர் கைது (UPDATE)-4 Arrested With 400kg Kerala Kanja

குறித்த வேனினுள் பெரிய அளவிலான கறுப்பு நிற பொலித்தீன் பைகள் 15 இல் அடைக்கப்பட்ட நிலையில் 400 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

குறித்த வேனில் பயணித்த இருவர் கைது செய்யப்பட்டனர். குறித்த இருவரில் 41 வயதான கடுவலவைச் சேரந்த நந்தகுமார் சிவனந்தன் எனும் நபரிடமிருந்து 0.38 வகை கைத்துப்பாக்கி ஒன்றும் அதற்கான தோட்டாக்கள் இரண்டும் மீட்கப்பட்டுள்ளன. 

குறித்த நபர் இந்தியாவில் வைத்து 700 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்ததாக தெரிவித்து, அவருக்கு எதிராக இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியாக இனங்காணப்பட்டு, அதில் அவருக்கு பத்து வருட சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் அவர் மீண்டும் இலங்கைக்கு வந்துள்ளார் என தெரிவிக்கப்படுவதாக, ருவன் குணசேகர தெரிவித்தார்.

அத்துடன், வேனில் பயணித்த மற்றைய நபரான 30 வயதான, இங்கிரியவைச் சேர்ந்த மங்கள மதுசாந்த ஜயசிங்க என்பவரும், குறித்த வேனுக்கு பாதுகாப்பு மற்றும் தகவல்களை வழங்கும் நோக்கில் உதவி, ஒத்தாசை புரியும் வகையில் கார் ஒன்றில் முன்னால் பயணித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த காரை 42 வயதான பெண்ணொருவர் ஓட்டிச்சென்றுள்ளதோடு, அவருடன் 39 வயதான நபர் ஒருவரும் இருந்துள்ளனர். அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதோடு குறித்த காரையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த நபர்களை இன்றைய தினம் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி ஏழு நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரிப்பதற்கான உத்தரவை வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

அத்துடன் குறித்த கஞ்சா போதைப்பொருளை இலங்கைக்கு கொண்டு வந்தவர்கள், அதற்கு உதவி ஒத்தாசை வழங்கியவர்கள் உள்ளிட்டோரை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

திட்டமிடப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

(10.23am), (12.41pm)


Add new comment

Or log in with...