ஐசிசி டெஸ்ட் பந்து வீச்சுத் தரவரிசை | தினகரன்

ஐசிசி டெஸ்ட் பந்து வீச்சுத் தரவரிசை

முதல் 10 இடங்களுக்குள் இலங்கை வீரர்கள் இல்லை

ஐசிசி டெஸ்ட் பந்து வீச்சுத் தரவரிசையில் அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பெட் கம்மின்ஸ், இங்கிலாந்தின் ஜேம்ஸ் அண்டர்சனைக் கடந்து 2 ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள பந்து வீச்சாளர்களுக்கான தர வரிசையில், முதல் 10 இடங்களுக்குள் எந்தவொரு இலங்கை வீரர்களும் இடம்பிடிக்கவில்லை என்பதோடு, தில்ருவன் பெரேரா 30 ஆவது இடத்திலும், சுரங்க லக்மால் 31 ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் ஜேசன் ஹோல்டர் 6 ஆம் இடத்தில் உள்ளார்.

பெட் கம்மின்ஸ், முதலிடத்திலுள்ள தென்னாபிரிக்க வீரர் கசிசோ ரபாடாவை பார்க்கிலும் தற்போது 4 புள்ளிகளே குறைவாக உள்ளார்.

விரைவில் ரபாடாவையும் முன்னோக்கிசெல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கைக்கு எதிராக  கென்பராவில் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய மிட்செல் ஸ்டார்க் 10 இடங்கள் முன்னேறி 15 ஆவது இடத்தை பிடித்துள்ளார்.

மே.இ.தீவுகளின் கிமார் ரோச் 12ம் இடத்துக்கும் ஷனன் கேப்ரியல் 11ம் இடத்திலும் உள்ளனர்.

முதல் 10 பந்துவீச்சாளர்கள்

1. கசிசோ ரபாடா (882புள்ளிகள்)
2. பெட் கம்மின்ஸ் (878புள்ளிகள்)
3. ஜேம்ஸ் அண்டர்சன் (860புள்ளிகள்)
4. வெர்னன் பிலண்டர் (809புள்ளிகள்)
5. ரவீந்திர ஜடேஜா (794 புள்ளிகள்)
6. ஜேசன் ஹோல்டர்
7. ட்ரெண்ட் போல்ட்
8. மொஹம்மட் அப்பாஸ்
9. டிம் சௌதி
10. ரவிச்சந்திரன் அஸ்வின்


Add new comment

Or log in with...