Thursday, April 18, 2024
Home » காசா – இஸ்ரேல் பாதை திறப்பு

காசா – இஸ்ரேல் பாதை திறப்பு

by Rizwan Segu Mohideen
December 19, 2023 3:04 pm 0 comment

போர் ஆரம்பித்த பின்னர் ஐக்கிய நாடுகள் உதவி வாகனங்கள் முதன்முறையாக இஸ்ரேலில் இருந்து நேரடியாகக் காசாவுக்குள் செல்கின்றன.

காசா பிராந்தியத்திற்கு மருந்துகள், உணவுப் பொருட்கள் போன்றவற்றை ஒரு மடங்கு அதிகமாக வழங்குவதே இலக்கு என்று இஸ்ரேலிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கெரெம் ஷாலோம் சோதனைச் சாவடி வழியாக மொத்தம் 79 வாகனங்கள் காசாவிற்கு உதவிப் பொருட்களை வழங்கின. பல வாரங்களாக, எகிப்து வழி உதவிப் பொருட்கள் காசாவிற்குள் கொண்டு செல்லப்பட்டன.

சோதனை நடவடிக்கைகள், ஏற்பாட்டு சிக்கல்கள் உதவிப் பொருட்கள் சென்று சேர்வதை மெதுவடையச் செய்ததாய் எகிப்திய அதிகாரிகள் கூறினர். இதேவேளை காசா மக்களை பட்டினியால் அழிக்க இஸ்ரேல் முயற்சி செய்வதாக அமெரிக்க மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. காசாவுக்கு எந்த மனிநேய உதவிகளும் போதுமான அளவு அனுமதிக்கப்படவில்லை என்று அது குற்றம்சாட்டியது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT