தேசிய அரசு யோசனைக்கு ஐ.தே.மு கட்சிகள் ஏக ஆதரவு | தினகரன்

தேசிய அரசு யோசனைக்கு ஐ.தே.மு கட்சிகள் ஏக ஆதரவு

பாராளுமன்ற குழுக்கூட்டத்தில் முடிவு 

தேசிய அரசாங்கம் அமைக்கும் பிரேரணைக்கு ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளும் முழுமையாக ஆதரவளிப்பதற்கு அரசாங்கத்தரப்பு பாராளுமன்றக் குழுக்கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.  

நேற்று (05) மாலை பாராளுமன்றக் கட்டிடத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கூடிய ஆளும்தரப்பு பாராளுமன்றக் குழுக் கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.  

நாளை 7ஆம் திகதி அரச தரப்பினால் தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கான பிரேரணை முன்வைக்கப்படவுள்ளதாக இக்கூட்டத்தில் பிரதமர் அறிவித்து அதற்கு கட்சிகள் ஆதரவை வழங்க வேண்டுமெனக் கோரியுள்ளார்.  

இதன்போது அரசில் அங்கம் வகிக்கும் ஐக்கிய தேசிய முன்னணியின் சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒருமித்து ஆதரவளிப்பதாக தெரிவித்ததையடுத்து கூட்டத்தில் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.  


Add new comment

Or log in with...