புற்றுநோயாளர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கிய கௌதமி | தினகரன்

புற்றுநோயாளர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கிய கௌதமி

உலக புற்றுநோய் தினம் பெப்ரவரி 04 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்றது. இதனை முன்னிட்டு நடிகை கௌதமி சென்னையில் நேற்று (05) புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை நேரில் காண மருத்துவமனைக்கு விஜயம் செய்தார்.

வி.எஸ். மருத்துவமனையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களிடம் இனிதே பேசி தன்னுடைய நேரத்தை செலவழித்தார். "சமூகப் பொறுப்புணர்வு உள்ள குடிமக்கள் அனைவரும் இதற்காக தன்னுடைய நேரத்தை ஒதுக்க வேண்டும். இதனால் வலி உள்ளவர்கள் அவர்களுடைய வலியை மறப்பதற்கு இது ஒரு உந்து கோலாக அமையும்" என்றார் கௌதமி.

மேலும் அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடி அவர்களுக்கு பரிசு பொருட்களை வழங்கினார். நடிகை கெளதமி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து குணமடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...