கவிஞன் ஒரு காதல் மருத்துவன் | தினகரன்

கவிஞன் ஒரு காதல் மருத்துவன்

கண்ணதாசனின் காதல் பாடல்கள் காலத்தால் அழியாதவை என்றே கூற வேண்டும்.

காதல்  வந்தாலே பலர் கவிஞர்கள் ஆகிவிடுவார்கள். அந்த காதல் வந்தால் நிச்சயம்  கவியரசர் கண்ணதாசன் பாடல்கள் பிடித்துப் போகும். மீண்டும் மீண்டும் கேட்டு  ரசிக்கத் தோன்றும்.

கண்ணதாசன் தத்துவப் பாடல்கள் எழுதுவதில் மட்டும் அல்ல காதல் பாடல்கள் எழுதுவதிலும் வல்லவர்.

காதலிக்க நேரமில்லை படத்தில் வரும் அனுபவம் புதுமை பாடலை இன்று பார்த்தால் கூட மெய் சிலிர்க்கும்.

ஆனந்த ஜோதி படத்தில் வந்த நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா என்ற பாடலை எத்தனை முறை கேட்டாலும் அலுக்காது.

மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ

மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ

 என் நேரமும் உன் ஆசை போல் பெண் பாவை நான் பூ சூடிக்கொள்ளவோ என்ற கண்ணதாசன் வரிகளை வாணி ஜெயராம் குரலில் கேட்கவே இனிமை.

கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா, நாம் கையோடு கை சேர்த்துக் கொள்ளலாமா என்ற வரிகள் இன்றைய தலைமுறைக்கும் பொருந்தும்.

இயற்கை எனும் இளைய கன்னி ஏங்குகிறாள் துணையை எண்ணி என்கிற பாடல் என்றும் மறக்காத பாடல்.


Add new comment

Or log in with...