Thursday, April 25, 2024
Home » இலங்கை வந்த Nas Daily வெளியிட்டுள்ள வீடியோ

இலங்கை வந்த Nas Daily வெளியிட்டுள்ள வீடியோ

- உலகில் எனக்குப் பிடித்த நாடுகளில் ஒன்றான இலங்கைக்கு வரவேற்கிறோம்

by Rizwan Segu Mohideen
December 19, 2023 1:11 pm 0 comment

உலகெங்கிலும் மில்லியன் கணக்கான இரசிகர்களைக் கொண்ட பிரபலமான ‘vlog’ படைப்பாளரும் மிகப் பிரபல சமூக ஊடக செல்வாக்கு மிக்கவருமான நாஸ் டெய்லி (Nas Daily) கடந்த மாதம் இலங்கை வந்திருந்தார்.

இலங்கை வந்த அவர், பல்வேறு இடங்களிலும் வீடியோக்களை எடுத்திருந்தார். அந்த வகையில் அது தொடர்பான வீடியோவை அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

“மிக அழகிய ரயில் பயணம்” என தலைப்பிட்டிருக்கும் அந்த வீடியோவில். இலங்கையின் பல்வேறு இடங்களுக்குச் சென்று அவர் எடுத்த வீடியோக்களை ஒன்றிணைத்து பதிவிட்டுள்ளார்.

குறித்த வீடியோவில்,

அழகான இயற்கையைக் காண்பீர்கள்.

அழகான கலாச்சாரம். மற்றும் அழகான மனிதர்கள். உலகில் எனக்குப் பிடித்த நாடுகளில் ஒன்றான இலங்கைக்கு வரவேற்கிறோம்.

உங்கள் அழகான நாட்டிற்கு என்னை வரவேற்ற இலங்கை சுற்றுலாவுக்கு நன்றி.

என பதிவிட்டுள்ளார்.

Nas Daily என அழைக்கப்படும் நுஸைர் யாசீன் (Nuseir Yassin), இலங்கை வந்த வேளையில் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்துடன் உடன்படிக்கையொன்றிலும் கைச்சாத்திட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வீடியோவை பார்வையிட<<< click here >>>

பிரபல ‘vlog’ படைப்பாளர் Nas Daily இலங்கை சுற்றுலா உடன்படிக்கையில் கைச்சாத்து

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT