அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர் சிராஜ் மசூர் இராஜினாமா | தினகரன்

அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர் சிராஜ் மசூர் இராஜினாமா

அடுத்த அமர்வில் இராஜினாமா கடிதம் கையளிப்பு

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினரும் கட்சியின் தவிசாளருமான சிராஜ் மசூர் தனது மநாகர சபை உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அக்கரைப்பற்று மாநகர சபையின் பெப்ரவரி மாத அமர்வில் கலந்து கொண்டதன் பின்னர், இராஜினாமா செய்யவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கட்சியின் அக்கரைப்பற்று செயற்குழுவினர், ஆதரவாளர்கள் மற்றும் தலைமைத்துவ சபையினருடன் கலந்து பேசியதன் அடிப்படையிலேயே இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

அக்கரைப்பற்று மாநகர சபையின் புதிய உறுப்பினராக, ஓய்வுபெற்ற மாவட்ட புள்ளிவிவரவியல் உயர் அதிகாரியாக கடமையாற்றியஎம்.எம்.எம். தையார் என்பவரை நியமிப்பதென அக்கரைப்பற்று செயற்குழு தீர்மானித்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

மற்றவர்களுக்கு இடம் கொடுக்காமல், காலாகாலமும் பதவியைக் கட்டிப் பிடித்துக் கொண்டிருப்போரை பல தளங்களிலும் எதிர்த்து வந்திருக்கிறேன் என்று தெரிவித்த அவர், தனது இராஜினாவை முழு மன விருப்பத்துடன் செய்யவுள்ளதாகவும் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...