ரூ. 1.2 மில். பெறுமதியான வல்லப்பட்டையுடன் இளைஞர் கைது | தினகரன்

ரூ. 1.2 மில். பெறுமதியான வல்லப்பட்டையுடன் இளைஞர் கைது

ரூபா 1.2 மில்லியன் பெறுமதியான வல்லப்பட்டையுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (01) இரவு 9.10 மணி அளவில் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து குறித்த சந்தேகநபரரை சோதனையிட்ட போது அவரது பயணப்பொதியில் பொதி செய்யப்பட்ட நிலையில் இருந்த 27 கிலோகிராம் வல்லப்பட்டையை மீட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

நீர்கொழும்பைச் சேர்ந்த 21 வயதான இச்சந்தேக நபர், மும்பாய் வழியாக 9W 0251L எனும் விமானம் மூலம் துபாய் செல்ல முற்பட்ட வேளையிலேயே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.


Add new comment

Or log in with...