IIT இன் 24 ஆவது பட்டமளிப்பு விழா; 200 இற்கும் மேற்பட்டோருக்கு பட்டம் | தினகரன்

IIT இன் 24 ஆவது பட்டமளிப்பு விழா; 200 இற்கும் மேற்பட்டோருக்கு பட்டம்

IIT இன் 24 ஆவது பட்டமளிப்பு விழா; 200 இற்கும் மேற்பட்டோருக்கு பட்டம்-IIT 24th Convocation 2018; More than 200 Graduated

தொழில்நுட்ப மற்றும் வர்த்தகத்துறை பட்டதாரிகள்

இலங்கையில் பிரித்தானிய உயர் கல்வியை வழங்குவதில் முன்னோடியாகவும், நாட்டின் முன்னணி தகவல் தொழில்நுட்ப மற்றும் வர்த்தக உயர் கல்வி ஸ்தாபனமாகவும் திகழ்ந்து வருகின்ற Informatics Institute of Technology (IIT), தனது 24 ஆவது வருடாந்த பட்டமளிப்பு விழாவினை அண்மையில் BMICH மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்தது.

IIT இன் 24 ஆவது பட்டமளிப்பு விழா; 200 இற்கும் மேற்பட்டோருக்கு பட்டம்-IIT 24th Convocation 2018; More than 200 Graduated

இந்த பட்டமளிப்பு விழாவில், ஐக்கிய இராச்சியத்தின் University of Westminster பல்கலைக்கழகத்தினால் தகவல் தொழில்நுட்பம் மற்றும் வர்த்தகத் துறைகளில் உலகளாவில் அங்கீகரிக்கப்பட்ட பட்டங்கள் மற்றும் மேற்பட்டங்களை 200 இற்கும் மேற்பட்ட IIT மாணவர்கள் பெற்றுள்ளனர். மேம்பட்ட மென்பொருள் பொறியியலில் முதுமாணி (Master of Science in Advanced Software Engineering), மென்பொருள் பொறியியலில் சிறப்பு கலைமாணி (Bachelor of Engineering (Honours) in Software Engineering), கணினி விஞ்ஞானத்தில் விஞ்ஞான சிறப்பு கலைமாணி (Bachelor of Science (Honours) in Computer Science) மற்றும் தகவல் முறைமைகளில் விஞ்ஞான சிறப்பு கலைமாணி (Bachelor of Science (Honours) in Information Systems) ஆகிய துறைகளில் தமது கற்கைநெறிகளை வெற்றிகரமாக பூர்த்தி செய்த மாணவர்களுக்கு வர்த்தக முகாமைத்துவ பட்டங்கள் இவ்விழாவில் வழங்கப்பட்டன.

IIT இன் 24 ஆவது பட்டமளிப்பு விழா; 200 இற்கும் மேற்பட்டோருக்கு பட்டம்-IIT 24th Convocation 2018; More than 200 Graduated

University of Westminster (UOW) பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரும், முதல்வருமான Dr. Peter Bonfield பட்டங்களை வழங்கி வைத்தார். நிகழ்வின் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட புகழ்பூத்த இலங்கை கிரிக்கெட் வீரரான குமார் சங்கக்கார  தனது வாழ்க்கையில் தடைகளைத் தாண்டி எவ்வாறு முன்னேறினார் என்பதையும், வெற்றியை எட்டுவதற்கு விடாமுயற்சியின் முக்கியத்துவம் தொடர்பில் உத்வேகமளிக்கும் உரையையும் ஆற்றியிருந்தார். University of Westminster பல்கலைக்கழகத்தின் பிரதித் துணைவேந்தரான (சர்வதேச) Prof. Alex Hughes, இணை முதல்வரான (வெளி உறவுகள்) Prof. Stephen Brookhouse மற்றும் ஏனைய பல கல்விமான்களும் நிகழ்வில் கலந்து சிறப்பித்ததுடன், IIT பணியாளர்கள் மற்றும் பெற்றோரும் பெருந்திரளாக கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

IIT இல் கல்வி கற்கும் போது மிகச் சிறந்த திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு பல்வேறு விருதுகளும் வழங்கப்பட்டன. மிகச் சிறந்த திறமைகளை வெளிப்படுத்திய நான்கு மாணவர்களுக்கு “கலாநிதி காமினி விக்கிரமசிங்க தங்கப் பதக்கங்கள்” வழங்கப்பட்டன. 

IIT இன் 24 ஆவது பட்டமளிப்பு விழா; 200 இற்கும் மேற்பட்டோருக்கு பட்டம்-IIT 24th Convocation 2018; More than 200 Graduated

1. Master of Science (MSc) in Advanced Software Engineering துறையில் Mohamed Hisham 

IIT இன் 24 ஆவது பட்டமளிப்பு விழா; 200 இற்கும் மேற்பட்டோருக்கு பட்டம்-IIT 24th Convocation 2018; More than 200 Graduated

2. Bachelor of Engineering (BEng) Honours in Software Engineering துறையில் Savindu Dias

IIT இன் 24 ஆவது பட்டமளிப்பு விழா; 200 இற்கும் மேற்பட்டோருக்கு பட்டம்-IIT 24th Convocation 2018; More than 200 Graduated

3. Bachelor of Science (BSc) Honours in Computer Science துறையில் Akila Hettiarachchi

IIT இன் 24 ஆவது பட்டமளிப்பு விழா; 200 இற்கும் மேற்பட்டோருக்கு பட்டம்-IIT 24th Convocation 2018; More than 200 Graduated

4. Bachelor of Science (BSc) Honours in Information Systems with Business Management துறையில் Ashan Liyanachchi

ஆகியோர் முறையே அப்பதக்கங்களைப் பெற்றுக்கொண்டனர்.

மாணவர்களால் பூர்த்தி செய்யப்பட்ட மிகச் சிறந்த செயற்திட்டங்களுக்கு இலங்கையின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ‘Best Final Year Project’ (மிகச் சிறந்த இறுதியாண்டு செயற்திட்டம்) விருதுகளை வழங்கியுள்ளன. Bachelor of Engineering (BEng) Honours in Software Engineering துறையில் Savindu Dias இற்கு Zone24X7 நிறுவனத்திடமிருந்தும், Bachelor of Science (BSc) Honours in Computer Science துறையில் Akila Hettiarachchi இற்கு Informatics International Limited நிறுவனத்திடமிருந்தும்,

IIT இன் 24 ஆவது பட்டமளிப்பு விழா; 200 இற்கும் மேற்பட்டோருக்கு பட்டம்-IIT 24th Convocation 2018; More than 200 Graduated

Bachelor of Science (BSc) Honours in Information Systems with Business Management துறையில் Himasha Fernando இற்கு LOLC Technologies Limited நிறுவனத்திடமிருந்தும் முறையே செயற்திட்டங்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன.

சகல துறைகளிலும் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு University of Westminster பல்கலைக்கழகத்தால் வழங்கப்படுகின்ற  ‘UoW Awards’ விருதுகளை

IIT இன் 24 ஆவது பட்டமளிப்பு விழா; 200 இற்கும் மேற்பட்டோருக்கு பட்டம்-IIT 24th Convocation 2018; More than 200 Graduated

Bachelor of Engineering (BEng) Honours in Software Engineering துறையில் Chamath Palihawadana 

IIT இன் 24 ஆவது பட்டமளிப்பு விழா; 200 இற்கும் மேற்பட்டோருக்கு பட்டம்-IIT 24th Convocation 2018; More than 200 Graduated

Bachelor of Science (BSc) Honours in Computer Science துறையில் Banu Athuraliya 

IIT இன் 24 ஆவது பட்டமளிப்பு விழா; 200 இற்கும் மேற்பட்டோருக்கு பட்டம்-IIT 24th Convocation 2018; More than 200 Graduated

Bachelor of Science (BSc) Honours in Information Systems with Business Management துறையில் Dilthushi Jayawardana வும் முறையே பெற்றுக்கொண்டனர்.

மேலும், 2016 ஆம் ஆண்டு ஜனாதிபதி விருதுகள் நிகழ்வில் விருதைப் பெற்று வெற்றியீட்டிய கணினி கற்கை பீடத்தின் (Department of Computing) விரிவுரையாளரான Achala Aponso இற்கு IIT கற்கை நிறுவனத்தின் முகாமைத்துவ சபையின் சார்பில் விசேட இனங்காணல் அங்கீகார விருதும் வழங்கப்பட்டது. கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புடன் அவர் மேற்கொண்ட ஆராய்ச்சி பிரபல பத்திரிகைகளில் பிரசுரமாகியுள்ளதுடன், அது கற்கை நிறுவனத்திற்கு மகத்தான கௌரவத்தையும் சேர்ப்பித்துள்ளது.

IIT கற்கை நிறுவனத்தின் பணிப்பாளரான Prof. Jayantha Wijeyaratne  தனது வரவேற்புரையில், “4 ஆவது கைத்தொழில் புரட்சி யுகத்தில், மிக வேகமாக மாற்றம் கண்டு வருகின்ற ஒரு உலகில் நாம் இன்று வாழ்ந்து வருகின்றோம். அது அறிவு அடிப்படையிலான பொருளாதாரத்தில் தங்கியுள்ளது. அறிவு அடிப்படையிலான பொருளாதாரத்தின் நவீன யுகத்திற்குத் தேவையான திறன்கள் மற்றும் திறமைகள் மிகவும் சிக்கலானவை. இலங்கையில் பிரித்தானிய உயர் கல்வியை வழங்கும் நிறுவனங்களுள் முன்னணியில் திகழுகின்ற Informatics Institute of Technology (IIT) கற்கை நிலையத்தில் கல்வி கற்று, மிகவும் பிரசித்தி பெற்ற பிரித்தானிய பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகத் திகழும் University of Westminster பல்கலைக்கழகத்தில் இன்று பட்டத்தைப் பெற்றுள்ள பட்டதாரிகள் அனைவரும் இந்த சக்தி வாய்ந்த யுகத்திற்குத் தேவையான திறன்கள் மற்றும் திறமைகளை வளர்த்திருப்பர் என்று நான் திடமாக நம்புகின்றேன்,” என்று குறிப்பிட்டார்.

IIT இன் 24 ஆவது பட்டமளிப்பு விழா; 200 இற்கும் மேற்பட்டோருக்கு பட்டம்-IIT 24th Convocation 2018; More than 200 Graduated

University of Westminster (UOW) பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரும், முதல்வருமான Dr. Peter Bonfield  நிகழ்வில் உரையாற்றுகையில், “ஐக்கிய இராச்சிய பல்கலைக்கழகமான University of Westminster உலகளாவிய கண்ணோட்டத்தைக் கொண்டுள்ளதுடன், எமது மாணவர்களை தொழில்சார் பட்டதாரி வாழ்விற்கு தயார்படுத்தி, தொழிற்துறையுடனான ஈடுபாட்டைப் பேணுவதில் தீவிரமான அர்ப்பணிப்புடன் உள்ளது. எமது கற்கைநெறிகள் அனைத்தும், தொழிற்துறை, புத்தாக்கம் மற்றும் படைப்பாக்கத்திறன் சார்ந்தவையாக உள்ளதுடன், அனைத்து பின்னணிகளையும் சார்ந்த மாணவர்களையும் தமது திறமைகளை வெளிக்கொணர்ந்து, தமது வாய்ப்புக்களை முழுமையாக அடையப்பெறுவதற்கு வழிகாட்டுவதை நோக்கமாகக் கொண்டவை,” என்று குறிப்பிட்டார். அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், “கடந்த இரு தசாப்த காலத்தில் இலங்கையில் மட்டுமன்றி, சீனா, உஸ்பெகிஸ்தான் மற்றும் ஐரோப்பா உட்பட உலகெங்கிலும் கல்விசார் கற்கைநெறிகளை Westminster பெருமையுடன் வடிவமைத்து, வழங்கி வந்துள்ளது. IIT, அதன் மாணவர்கள் மற்றும் இலங்கையிலுள்ள எமது சர்வதேச பழைய மாணவர் சமூகம் ஆகியவற்றுடன் இணைந்து நாம் முன்னெடுக்கும் செயற்பாடுகள் Westminster கற்றல் அனுபவத்திற்கும் அப்பால் ஒரு சர்வதேச பின்னணியைக் கொண்டுள்ளது,” என்று குறிப்பிட்டார்.

1990 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட IIT ஆனது தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் மற்றும் வியாபாரம் ஆகிய துறைகளில் நன்மதிப்புடைய பிரித்தானிய பட்டப்படிப்புக்களை வழங்க ஆரம்பித்த முதலாவது தனியார் உயர் கல்வி நிலையம் என்ற பெருமையைக் கொண்டுள்ளது. ஐக்கிய இராச்சியத்திலுள்ள University of Westminster மற்றும் Robert Gordon University ஆகியவற்றின் உள்வாரி மேற்பட்டப்படிப்பு மற்றும் பட்டப்படிப்பு கற்கைநெறிகளை வழங்கி வருகின்ற IIT, விருதினை வென்றுள்ள ஒரு பல்கலைக்கழகமாகும். உலகத்தரம் வாய்ந்த பட்டதாரிகளை தோற்றுவித்துள்ளதன் மூலமாக கடந்த காலங்களில் இலங்கையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் வர்த்தகத் துறைகளுக்கு வலுவூட்டுவதில் IIT முக்கியமான பங்கு வகித்துள்ளது. இந்த பட்டதாரிகள் உள்நாட்டு மற்றும் சர்வதேச வர்த்தக மற்றும் அரச ஸ்தாபனங்களுக்கு பங்களிப்பினை வழங்கி வெற்றிகரமான தொழில் முயற்சியாளர்களாகவும், மற்றும் தகவல் தொழில்நுட்ப/வர்த்தகத் தொழிற்துறை சார்ந்தவர்களாகவும் மாறியுள்ளனர். ஆரம்பிக்கப்பட்ட காலம் முதற்கொண்டு பல்லாயிரக்கணக்கான பட்டதாரிகளை IIT உருவாக்கியுள்ளதுடன், உலகெங்கிலும் 250 இற்கும் மேற்பட்ட ஸ்தாபனங்களில் அவர்கள் சிறப்பாக சேவையாற்றி வருகின்றனர்.


Add new comment

Or log in with...