இலங்கையில் OPPO F9 Jade Green அறிமுகம் | தினகரன்

இலங்கையில் OPPO F9 Jade Green அறிமுகம்

இலங்கையில் OPPO F9 Jade Green அறிமுகம்-OPPO F9 Jade Green Introduced in Sri Lanka

தேசத்தின் கண்கவர் வண்ணச்சாயலுக்கு வழங்கும் கௌரவிப்பு

முன்னணி ஸ்மார்ட்ஃபோன் வர்த்தக நாமமான OPPO, கலை மற்றும் புத்தாக்கமான தொழில்நுட்பங்களைக் கொண்ட தயாரிப்புகளை வழங்குவதில் தன்னை ஈடுபடுத்தியுள்ள நிலையில், OPPO F9 Jade Green தெரிவை தற்போது உள்நாட்டு சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.

இலங்கையில் OPPO F9 Jade Green அறிமுகம்-OPPO F9 Jade Green Introduced in Sri Lanka

F9 Jade Green தெரிவில் பச்சை வெண்மை கலந்த நிறப்பூச்சு காணப்படுவதுடன், பின்புறத்தே பச்சை வர்ணம் அதிகமாகவும், வெள்ளை நிறமும் அடங்கியுள்ளது. மேலும், கமரா பகுதி, fingerprint scanner மற்றும் அனைத்தையும் தாங்கும் பக்கங்களில் உலோக பட்டி பகுதி போன்றன தங்க முலாம் பூசப்பட்டு, தொலைபேசிக்கு கவர்ச்சியான தோற்றத்தை வழங்கும் வகையில் அமைந்துள்ளது. தொலைபேசியின் செயற்திறனை பொறுத்தமட்டில், ஏற்கனவே கடந்த ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகம் செய்யப்பட்ட F9 தெரிவுகளுக்கு நிகரானதாக அமைந்துள்ளது.

OPPO F9 Jade Green தெரிவில், 6.3 அங்குல Full HD+ display, a MediaTek Helio P60 octa-core
processor உடன் 4GB RAM, 64 GB internal ROM மற்றும் நீடித்துக் கொள்ளக்கூடிய மெமரி ஆகியன அடங்கியுள்ளன. பின்புற பகுதி 16MP, f/1.8 மற்றும் 2MP, f/2.4 இரட்டை கமராக்களை கொண்டுள்ளதுடன், முன்னால் 25MP selfie கமராவும் காணப்படுகிறது. 3500mAh பற்றரியினால் வலுவூட்டப்படுவதுடன், VOOC Flash Charge தொழில்நுட்பத்தில் அமைந்துள்ளது. இதனூடாக 5 நிமிடங்கள் சார்ஜ் செய்து, 2 மணி நேரம் உரையாட முடியும்.

இலங்கையில் OPPO F9 Jade Green அறிமுகம்-OPPO F9 Jade Green Introduced in Sri Lanka

OPPO லங்கா பிரதம நிறைவேற்று அதிகாரி பொப் லி கருத்துத் தெரிவிக்கையில், “Jade Green இனால் நாட்டின் இயற்கை அம்சங்கள் பிரதிபலிக்கப்படுவதுடன், முன்னர் அறிமுகம் செய்யப்பட்ட Sunrise
Red, Twilight Blue மற்றும் Starry Purple ஆகியவற்றில் காணப்படும் அதே அம்சங்கள் இதிலும் அடங்கியுள்ளன. மேற்பகுதியில் மென்மையான சாம்பல் கலந்த பச்சை நிறமும், கீழ் பகுதியில் கடின பச்சை நிறமும் காணப்படுகிறது. இது புத்துணர்வை வழங்குவதாக அமைந்திருக்கும் என்பதுடன், 2019 ஆம் ஆண்டின் புதிய கண்கவர் வர்ணமாக அமைந்துள்ளது” என்றார்.

OPPO F9 Jade Green தெரிவை தற்போது இலங்கையில் ரூ. 54,990 க்கு கொள்வனவு செய்ய முடியும்.


Add new comment

Or log in with...