திரைக்குள் ஒளிந்த கமெராவுடன் HUAWEI NOVA 4 | தினகரன்


திரைக்குள் ஒளிந்த கமெராவுடன் HUAWEI NOVA 4

திரைக்குள் ஒளிந்த கமெராவுடன் HUAWEI NOVA 4-Huawei Nova 4-With In Screen Camera

NOVA 4: HUAWEI அறிமுகப்படுத்தும், வெளித்தெரியாத வகையில் திரைக்குள் அடக்கப்பட்ட உலகின் முதலாவது கமெராவை கொண்டுள்ள தொழில்நுட்பத்துடனான கையடக்க தொலைபேசியாகும்.

வெற்றிகரமான ஒரு ஆண்டைப் பூர்த்தி செய்துள்ள HUAWEI, தனது NOVA ஸ்மார்ட்போன் உற்பத்தி வரிசையில் சமீபத்தைய புத்தாக்கமான NOVA 4 இனை ஊக்குவிக்க ஆரம்பித்துள்ளது.

டிசம்பர் 17 ஆம் திகதியன்று சர்வதேசரீதியாக NOVA 4 உத்தியோகபூர்வமாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளதுடன், இப்புதிய சாதனத்தின் புரட்சிகரமான சிறப்பம்சங்களுடன் பண்டிகைக்கால மகிழ்ச்சியை மேலும் சிறப்பித்துள்ளது.

ஊடகங்கள் மற்றும் இணையத்தளங்கள் மூலமாக இது தொடர்பான முதற்கட்ட விமர்சனங்கள் மற்றும் கருத்தாய்வுகளில் இத்தொழில்நுட்பம் வியப்பினை ஏற்படுத்தியுள்ளது என அறியமுடிகின்றது.

வெளித்தெரியாத வகையில் திரைக்குள் அடங்கியுள்ள தனது கமெரா தொழில்நுட்பத்தை தீவிரமாக பயன்படுத்தும் வகையில், HUAWEI NOVA 4 ஆனது முன்பக்க சட்டங்களின்றிய bezelless) வடிவமைப்பினை மற்றுமொரு பரிணாமத்திற்குள் இட்டுச் செல்லும் வகையில், உலகில் தனது மிகச் சிறிய 25MP திரை செஃல்பி கமெராவினை கொண்டுள்ளதுடன், திரையைப் பொறுத்த வரையில் இதற்கு முன்பு இருந்தவற்றை விடவும் மிகச் சிறிதளவு இடப்பரப்பினையே அது எடுத்துக் கொள்கின்றது.

மேலும், அதிகரித்த அளவிலான திரை விகிதத்தையும் NOVA கொண்டுள்ளது.

திரை - உடல் மேற்பாகம் இடையிலான 86.3%என்ற விகிதமானது கமெராவின் தொழில்நுட்ப பெறுபேற்றுத்திறனை எவ்விதத்திலும் பாதிக்கவில்லை.

பரந்த கோணத்துடன் பின்புறத்தில் மூன்று கமெராக்களை இச்சாதனம் கொண்டுள்ளமை அதன் மற்றுமொரு தொழில்நுட்ப சிறப்பம்சமாகும். HUAWEI தனது உத்தியோகபூர்வ Weibo கணக்கில் பரந்த கோணத்தின் மீது கவனம் செலுத்தியுள்ளதுடன், 48MP + 16MP + 2MP ஆகிய மூன்று பின்புற கமெராக்களையும் இணைத்து, 117 பாகை வரை நீட்டப்படக்கூடிய வகையில் படங்களை வசப்படுத்த இடமளிக்கின்ற ஒரு அதிநவீன புகைப்படவியல் திறன் சாதனமாக இதனை வடிவமைத்துள்ளது.

அகன்ற 6.4 அங்குல IPS LCD fullview display மற்றும் முழுமையான edge to edge) திரை (screen)) ஆகியன NOVA 4 series உற்பத்தி வரிசையின் தனித்துவமான சிறப்பம்சங்களில் அடங்கியுள்ளன.

எவ்விதமான குறைபாடுகளுமின்றி அழகிய கலைநயத்துடனான வடிவமைப்புடன், தனது பாவனையாளர்களுக்கு அதியுச்ச ~திரை அனுபவத்தை| (Screen experience) NOVA 4 வழங்குகின்றது.

8GB RAM மற்றும் தாராளமான தேக்குதிறன் கொண்ட 128GB internal storage ஆகியவற்றுடன் வலுவான Kirin 970 chipset இனையும் இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. அதியுச்ச gaming அனுபவத்திற்காக GPU Turbo acceleration தொழில்நுட்ப பக்கபலத்திற்குப் புறம்பாக, அதிவேகமாக மின்னேற்றம் செய்வதற்காக 18W வலுவுடன் 3,750mAh மின்கலத்தையும் NOVA 4 கொண்டுள்ளது.

HUAWEI இன் அதிநவீன operating system ஆன EMUI 9.0 இனை இத்தொலைபேசி சாதனம் கொண்டுள்ளதுடன், அது AI stabilizer, HDRPro, individual spotlight reel உடனான AI வீடியோ ரெக்கோர்டிங் (video recording), பிரத்தியேக அழைப்பவர் இனங்காணல் இலக்கம் (live call image beautification) மற்றும் நேரலை அழைப்பு பட அழகுபடுத்தல் (customized caller ID) அடங்கலாக NOVA 4 சாதனத்தின் தொழிற்பாட்டுத் திறனை கணிசமான அளவில் மேம்படுத்துகின்றது.

மிக இலகுவாக தொலைபேசியை ஸ்கேன் செய்வதன் மூலமாக HUAWEI இன் அதிநவீன AI தொழில்நுட்ப சிறப்பம்சங்களை இது அறிமுகப்படுத்தியுள்ளதுடன், NOVA 4 இன் HiVision ஆனது AI Shopping, AI Calories மற்றும் பல சிறப்பம்சங்கள் அடங்கலாக காட்சி மற்றும் பொருளின் இனங்காணலில் பன்முக AI அனுபவத்தை வழங்குகின்றது.

HUAWEI NOVA 4 ஆனது வெகுவிரைவில் இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...