Home » பாடசாலைக்கு 500 மீற்றருக்குள் பொருத்தமற்ற விடயங்கள் அகற்றப்படும்

பாடசாலைக்கு 500 மீற்றருக்குள் பொருத்தமற்ற விடயங்கள் அகற்றப்படும்

- எதிர்வரும் விடுமுறையின் பின் பாடசாலை ஆரம்பிக்கும் முன் நடவடிக்கை

by Rizwan Segu Mohideen
December 18, 2023 5:46 pm 0 comment

பாடசாலைகளைச் சுற்றியுள்ள மாணவர்களுக்கு பொருத்தமற்ற மற்றும் தீங்கு விளைவிக்கும் விடயங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமென, பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பாடசாலை விடுமுறை முடிவடைவதற்குள் குறித்த நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக, அவர் குறிப்பிட்டார்.

இன்றையதினம் (18) கொழும்பு வேலுவன வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு கருத்துத் தெரிவித்த அவர்,

பாடசாலைக்கு உள்ளேயும் வெளியேயும் மாணவர்களுக்கு பொருத்தமற்ற விடயங்கள் காணப்படுவதாக சமூகத்தில் பேசப்பட்டு வருகின்றது. அந்த வகையில் நேற்றைய தினம் இது தொடர்பில் கலந்துரையாடி, அனைத்து பாடசாலைகளுக்கும் 500 மீற்றர் தூரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாணவர்களுக்கு பொருத்தமற்ற விடயங்கள், மாணவர்களுக்கு உகந்ததாக கருதப்படாத விடயங்கள், அவ்வாறான பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்ற இடங்களை சோதனையிட்டு அவற்றை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, நாட்டில் உள்ள அனைத்து உயர் பதவிகளில் உள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பெப்ரவரி மாத பாடசாலை விடுமுறைகளின் பின்னர் இந்நடவடிக்கையை முன்னெடுத்து, பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் போது அவ்விடயம் நிறைவு செய்யப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் பொலிசாரின் உழைப்பை பயன்படுத்தி உச்ச நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பாடசாலை சூழலுக்கு பொருந்தாத, அவற்றுக்கு அச்சுறுத்தலான விடயங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமென, அவர் இதன்போது சுட்டி காட்டினார்.

பாடசாபாடசாலைகளுக்கு அருகில் விற்பனை செய்யப்படும் அனைத்து இடங்களும் அகற்றப்படும் என

“ஒவ்வொரு பாடசாலையிலிருந்தும் 500 மீட்டருக்குள் மாணவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களை விற்கும் அனைத்து இடங்களும் மீண்டும் பாடசாலை தொடங்கும் போது இருக்க அனுமதிக்கப்படாது. இது தொடர்பாக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தீங்கு விளைவிக்கும் அனைத்தும் அகற்றப்படும்.”

எதிர்வரும் பாடசாலை விடுமுறை நாட்களில் அவ்வாறான இடங்களை சோதனை செய்து அகற்றுமாறு பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாகவும் பதில் பொலிஸ் மா அதிபர் தேஸபந்து தென்னகோன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT