செளந்தர்யாவை மணக்கவிருக்கும் விசாகன் யார்? | தினகரன்


செளந்தர்யாவை மணக்கவிருக்கும் விசாகன் யார்?

செளந்தர்யாவை மணக்கவிருக்கும் விசாகன் யார்-Rajinikanth's younger daughter Soundarya all set to marry actor businessman Vishagan Vanangamudi

நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா - பிரபல மருந்து கம்பெனியின் உரிமையாளரான விசாகன் வணங்காமுடி இடையிலான திருமணம் எதிர்வரும் பெப்ரவரி 11ஆம் திகதி ரஜினியின் போயஸ் கார்டன் இல்லத்தில் நடைபெற உள்ளது.

நடிகர் ரஜினிகாந்தின் இளையமகள், சௌந்தர்யா. மோஷன் கேப்சரிங் தொழில்நுட்பத்தில் வெளிவந்த முதல் இந்தியத் திரைப்படமான `கோச்சடையான்’ படத்தை இயக்கியதோடு, சந்திரமுகி, சிவாஜி கோச்சடையான் படங்களிலும் பணியாற்றியிருந்தார். சமீபத்தில் தனுஷ் நடித்த, 'வேலையில்லா பட்டதாரி 2' படத்தை சௌந்தர்யா இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே பிரபல வர்த்தகர் ஆர். அஷ்வினுடன் 2010 இல் திருமணமான இவர், கருத்து வேறுபாடு காரணமாக 2017 இல் கணவரிடமிருந்து பிரிந்து விவாகரத்து பெற்றார்.  இவர்கள் இருவருக்கும் வேத் கிருஷ்ணா எனும் 3 வயது மகன் உள்ளார்.

இந்நிலையில் சௌந்தர்யா பிரபல மருந்து கம்பெனியின் உரிமையாளரான விசாகன் என்பவரைக் காதலித்து வருவதாகச் செய்திகள் வந்தன. விசாகனும் முதல் திருமண பந்தத்திலிருந்து விவாகரத்து பெற்றவர்தானாம். சௌந்தர்யா - விசாகன் திருமணச் செய்தி தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

செளந்தர்யா ரஜினிகாந்தை திருமணம் செய்யவிருக்கும் இந்த விசாகன் யார்?

கோயம்புத்தூர் அருகேயுள்ள சூலூர்தான் விசாகன் குடும்பத்தாரின் பூர்வீகம். இவரது பெரியப்பா பொன்முடி, தி.மு.க-வின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 2012-ம் ஆண்டு பொன்முடி காலமானார். பொன்முடியின் தம்பி வணங்காமுடி. அண்ணன் கட்சிப் பணிகளில் தீவிரமாகச் செயல்பட்டு வந்த அதேநேரத்தில், இவர் தன் மருந்து கம்பெனி வியாபாரத்தில் தீவிர கவனம் செலுத்தினார். வெறும் 5 லட்சம் முதலீட்டில் தொடங்கப்பட்ட அந்த மருந்து கம்பெனி, தற்போது வளர்ந்து இந்தியாவின் முன்னணி மருந்து கம்பெனிகளில் ஒன்றாக உள்ளது.

செளந்தர்யாவை மணக்கவிருக்கும் விசாகன் யார்-Rajinikanth's younger daughter Soundarya all set to marry actor businessman Vishagan Vanangamudi

விசாகன் வணங்காமுடி அண்மையில் மனோஜ் பீதாவின் இயக்கத்தில் வெளிவந்த, 'வஞ்சகர் உலகம்' திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்புதான் விசாகனும், செளந்தர்யாவும் முதல் முறையாகச் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். நட்பாகப் பழகத் தொடங்கியவர்கள், `ஒரே அலைவரிசை எண்ணம் கொண்ட நாம் ஏன் திருமணம் செய்துகொள்ளக்கூடாது?’ என்று பேசி, தங்களின் விருப்பத்தை இரு வீட்டார்களிடமும் தெரியப்படுத்தினர். பிறகு, இரு குடும்பத்தாரும் சந்தித்துப் பேசி இவர்களின் திருமணத்தை உறுதி செய்தனர்.


Add new comment

Or log in with...