`டிக் டாக்' நெகட்டிவ் கமென்ட்ஸ்.... உஸ்ஸ்ஸப்பா! - 'சத்யா' ஆயிஷா | தினகரன்


`டிக் டாக்' நெகட்டிவ் கமென்ட்ஸ்.... உஸ்ஸ்ஸப்பா! - 'சத்யா' ஆயிஷா

``ஆரம்பத்தில் பையன் மாதிரி நடிக்கணும்னு சொன்னதும் கொஞ்சம் தயங்கினேன். எல்லா சீரியலும் ஒரு டெம்ப்ளேட் இருக்கும். இந்த சீரியலில் ஒரு பொண்ணை ஆம்பளை பையன் மாதிரி போல்டா சித்திரிச்சிருக்காங்க. எனக்குத் தெரிஞ்சு சீரியலில் இது புது கான்செப்ட்."

`பொன்மகள் வந்தாள்' சீரியலின் மூலம் அறிமுகமானவர் ஆயிஷா. சில காரணங்களால் அந்த சீரியலிலிருந்து விலகினார். பின்னர், சன் டிவியில் ஒளிபரப்பான `மாயா' சீரியலில் நடித்தார். தற்போது, ஜீ தமிழ்த் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் தொடர் `சத்யா'. இந்த சீரியலில் டாம் பாய் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

``சில காரணங்களால் `பொன்மகள் வந்தாள்' சீரியலிலிருந்து விலக வேண்டியதாப் போச்சு. அந்த சீரியல் முடிஞ்சதும் ஒரு 3மாசம் பிரேக் எடுத்தேன். அந்தக் காலகட்டத்தில் பல விஷயங்களைப் பற்றிக் கத்துக்கிட்டேன். அதுக்கப்புறம் `மாயா' சீரியலில் நடிக்க வாய்ப்பு வர குஷியானேன். அந்த சீரியல் முடியுறப்போ கடைசி நாள் எனக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியிலிருந்து போன் வந்துச்சு. சரி ட்ரை பண்ணிப் பார்க்கலாம்னு ஆடிஷனுக்குப் போனேன். ஆடிஷன்ல நான் அந்த கேரக்டருக்கு மேட்ச்சா இருக்கேன்னு உடனே செலக்ட் பண்ணிட்டாங்க'' என்று கூறினார் ஆயிஷா.

அவரிடம்சீரியல் கதாபாத்திரம் குறித்துக் கேட்கப்பட்டபோது,

``ஆரம்பத்தில் பையன் மாதிரி நடிக்கணும்னு சொன்னதும் கொஞ்சம் தயங்கினேன். எல்லா சீரியலும் ஒரு டெம்ப்ளேட் இருக்கும். இந்த சீரியலில் ஒரு பொண்ணை ஆம்பளை பையன் மாதிரி போல்டா சித்திரிச்சிருக்காங்க. எனக்குத் தெரிஞ்சு சீரியலில் இது புது கான்செப்ட். கொஞ்சம் யோசிச்சேன். அதுக்கப்புறமா சரி முயன்றுதான் பார்ப்போமேனு ஓகே சொன்னேன். இந்த சீரியலுக்காகப் பசங்க போடுற மாதிரியான டிரெஸ்ஸா செலக்ட் பண்ணினேன். நான் ஏற்கெனவே ஒல்லிதான். இந்த சீரியலுக்காக இன்னும் கொஞ்சம் ஒல்லியாகியிருக்கேன். இது நல்ல போல்டான கதாபாத்திரம். பையன் மாதிரியான ஆட்டிட்யூட்ல நடிக்கணும். இந்த கேரக்டரில் என் நடிப்பு திறமையை நிச்சயம் புரூவ் பண்ணுவேன்'' என்று கூறிவரிடம் டிக் டாக் வீடியோ குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்க ஆயிஷாஇவ்வாறுபுன்னகையுடன் தெரிவித்துள்ளார்.

``என்னுடைய ஃப்ரீ டைமில் டிக் டாக் வீடியோ பண்ணுவேன். நான் பொழுதுபோக்குக்காகத்தான் அதைப் பண்றேன். பாசிட்டிவ், நெகட்டிவ்னு பயங்கரமாக வரும். அதில் எனக்குத் தேவையான பாசிட்டிவ் கம்மென்டை மட்டும் எடுத்துப்பேன். நான் கிளாமராப் பண்றதா சிலர் சொல்றாங்க. நான் அந்த வீடியோஸை எல்லாம் ஷூட்டிங் இடைவெளியில்தான் பண்ணுவேன். ஷூட்டிற்கு நான் எந்த காஸ்டியூமில் இருக்கேனோ அதில்தான் டிக் டாக் வீடியோவும் பண்றேன். லைக்ஸ்காக நானா தேர்ந்தெடுத்து டிரெஸ் பண்ணி வீடியோ பண்ணல. எனக்கு அது தேவையுமில்லை. அதே மாதிரி நான் கிளாமராலாம் வீடியோ பண்ணலை. பார்க்குறவங்களுக்கு கிளாமரா தெரிஞ்சா அது என் தப்பில்லை. பார்க்குறவங்களுடைய பார்வையில்தான் தப்பு! கையில் இருக்கிற தோல்தான் உடம்பு முழுக்க இருக்கு. கையைப் பார்க்கும்போது ஆபாசமா தெரியாத உங்களுக்கு முதுகைப் பார்க்கும்போது ஆபாசமா இருக்குன்னா அது யாருடைய தப்புன்னு நீங்களே சொல்லுங்க!'' என்று நம்மைப் பார்த்து கேள்வி எழுப்பியுள்ளார்.


Add new comment

Or log in with...