மரணித்த பொலிசாரின் வீட்டுக்கு விக்னேஸ்வரன் விஜயம் | தினகரன்


மரணித்த பொலிசாரின் வீட்டுக்கு விக்னேஸ்வரன் விஜயம்

 
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த பொலிஸ் சார்ஜன் சரத் பிரேமச்சந்திரவின் வீட்டிற்கு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.
 
 
இன்று (25) காலை சிலாபத்தில் உள்ள அவரது வீட்டிற்கு சென்ற முதலமைச்சர், உயிரிழந்த பொலிஸ் சார்ஜனின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தியதுடன், அவரது மனைவியுடன் கலந்துரையாடியதுடன், அவர்களின் துயரத்திலும் பங்கெடுத்துள்ளார்.
 
 
இச்சந்தர்ப்பத்தில், ஜனசெத பெரமுண கட்சியின் தலைவர் பத்தரமுல்லை சீலரத்தின் தேரரும் கலந்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
கடந்த சனிக்கிழமை (22) யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தின்போது, நீதிபதியின் மெய்ப்பாதுகாவலரான பிரேமச்சந்திர உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.
 
 
(யாழ்ப்பாணம் குறூப் நிருபர் - சுமித்தி தங்கராசா)
 
 

Add new comment

Or log in with...