ஹிட்லரின் தளபதி ஹேஸின் ஆள்மாறாட்டம் பொய்யானது | தினகரன்

ஹிட்லரின் தளபதி ஹேஸின் ஆள்மாறாட்டம் பொய்யானது

நாஜி போர் குற்றவாளியான ருடொல்ப் ஹேஸ் தமக்கு பதில் ஒருவரை சிறையில் ஆள்மாறாட்டம் செய்ததாக கூறப்படும் இருண்மை கோட்பாடு பொய்யாக்கப்பட்டுள்ளது. பெர்லினின் ஸ்பாண்டவு சிறையில் இருந்தவர் ஹேஸ் என்பதை உறுதி செய்யும் டி.என்.ஏ சோதனையை ஆஸ்திரிய விஞ்ஞானிகள் மேற்கொண்டுள்ளனர்.

ஸ்கொட்லாந்துக்கு தப்பியோடிய ஹேஸ் 1941 ஆம் ஆண்டு பிடிக்கப்பட்டு நிரம்பேர்க் வழக்கு விசாரணை மூலம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார். 1987 ஆம் ஆண்டு தனது 93 ஆவது வயதில் பெர்லின் சிலையில் தூக்கிட்ட நிலையில் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் ஆஸ்திரியாவின் செல்ஸ்பேர்க் பல்கலைக்கழக ஆய்வாளர்கள், ஹேஸின் தூர ஆண் உறவினர்களை கண்டுபிடித்து அவர்களின் டி.என்.ஏ மாதிரிகளுடன் ஒப்பிட்டு இந்த உண்மையை கண்டறிந்துள்ளனர். ஹேஸுக்கு பதிலான ஒருவரே சிறையில் இருந்ததாக நீண்ட காலம் நீடித்துவந்த நம்பிக்கையை அந்த சிறைச்சாலையில் இருந்த மருத்துவரும் உறுதி செய்ததாக அந்த கோட்பாட்டை கூறியவர்கள் வாதிட்டு வந்தனர். ஹெஸ் ஹிட்லரின் நம்பிக்கைக்குரிய தளபதியாக விளங்கியவராவார்.


Add new comment

Or log in with...