லயன் எயார் கறுப்புப் பெட்டி விபரம் வெளியாவது தாமதம் | தினகரன்

லயன் எயார் கறுப்புப் பெட்டி விபரம் வெளியாவது தாமதம்

கடந்த ஆண்டு, விபத்துக்குள்ளான லயன் எயார் விமானத்தின் குரல் பதிவுப் பெட்டியில் உள்ள விபரங்களைத் தற்போது வெளியிடப் போவதில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஓகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் இறுதி அறிக்கை வெளியிடப்பட்ட பின்னரே, குரல் பதிவுப் பெட்டியின் தகவல்கள் வெளியிடப்படும் என்று அதிகாரிகள் கூறினர். லயன் எயார் விமான விபத்தில் 189 பேர் உயிரிழந்தனர்.

ஜாவா கடலில், இம்மாத ஆரம்பத்தில், மீட்கப்பட்ட இரண்டாவது கறுப்பு பெட்டியின் மூலம் விமானிகளின் இறுதிக்கட்ட நடவடிக்கைகள் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள முடியும்.

இந்நிலையில், லயன் எயார் நிறுவனம், தங்களுக்கு இழப்பீடு வழங்கவேண்டும் என்று உயிரிழந்த பயணிகளின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Add new comment

Or log in with...