முஸ்லிம்களை தாக்க முயன்ற நால்வர் நியூயோர்க்கில் கைது | தினகரன்

முஸ்லிம்களை தாக்க முயன்ற நால்வர் நியூயோர்க்கில் கைது

அமெரிக்காவின் நியூயோர்க் மாநிலத்தில் வாழும் ஒரு சிறிய இஸ்லாமிய சமூகத்தை தாக்குவதற்காக திட்டம் தீட்டிய குற்றச்சாட்டில் மூன்று ஆண்கள் மற்றும் ஒரு பருவ வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள், வீட்டிலே தயாரிக்கும் வெடிகுண்டுகள் மற்றும் துப்பாக்கிகள் உள்ளிட்டவற்றை வைத்திருந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளனர்.

1980களில் பாகிஸ்தானைச் சேர்ந்த மதகுரு ஒருவரால் உருவாக்கப்பட்ட இஸ்லாம்பெர்கை இவர்கள் தாக்குவதற்கு திட்டமிட்டிருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இஸ்லாமிய சமூகமொன்றை தாக்குவதற்கு திட்டமிட்டிருப்பதாக கூறப்படும் சதித்திட்டம் ஒரு பாடசாலை சிறுவன் கொடுத்த துப்பு மூலமே தெரியவந்துள்ளது.

இந்த இஸ்லாமிய சமூகத்தில் தீவிரவாத முகாம் இருப்பதாக வதந்தி உள்ளன. எனினும் இந்த சமூகத்தினர் நட்புப்பாராட்டுபவர்களாகவும், அமைதினாவர்களாகவும் உள்ளனர் என்று உள்ளுர் மக்கள் குறிப்பிடுகின்றனர்.


Add new comment

Or log in with...