ஐ.எஸ் பகுதியிலிருந்து 5000 பேர் வெளியேற்றம் | தினகரன்

ஐ.எஸ் பகுதியிலிருந்து 5000 பேர் வெளியேற்றம்

இஸ்லாமிய அரசு குழு சிரியாவில் தொடர்ந்து நிலங்களை இழந்து வரும் நிலையில் கிழக்கு சிரியாவில் ஜிஹாதிக்களின் கடைசி நிலையில் இருந்து கடந்த திங்கட்கிழமை தொடக்கம் 500 ஐ.எஸ் போராளிகள் மற்றும் சுமார் 5,000 பேர் வெளியேறி இருப்பதாக கண்காணிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

டெயிர் எஸ்ஸோரில் ஐ.எஸ் குழுவை தமது நிலைகளில் இருந்து வெளியேற்றுவதற்கு கடந்த செப்டெம்பர் தொடக்க அமெரிக்க கூட்டுப் டையின் வான் தாக்குதல்களின் உதவியோடு குர்திஷ் சண்டையிட்டு வருகிறது.

இந்நிலையில் டெயிர் எஸ்ஸோரில் இருந்து 5000 பேர் வரை வெளியேறியதை மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகத்தின் தலைவர் ரமி அப்தல் ரஹ்மான் உறுதி செய்துள்ளார். இதில் பெரும்பாலான பொதுமக்கள் ஜிஹாதிக்களின் குடும்ப உறுப்பினர்களாவர். ஹஜா, ஷபா மற்றும் சுசா உட்பட கிழக்கில் பல கிராமங்களையும் அண்மைய வாரங்களில் ஐ.எஸ் இடம் இருந்து குர்திஷ் படை கைப்பற்றியுள்ளது.


Add new comment

Or log in with...