மலையேறும் நீச்சலுடை பெண் மலையிலிருந்து விழுந்து பலி | தினகரன்

மலையேறும் நீச்சலுடை பெண் மலையிலிருந்து விழுந்து பலி

மலை உச்சிகளில் ஏறி நீச்சல் உடையுடன் புகைப்படங்களை வெளியிடும் சமூகதளத்தில் பிரபலமான தாய்வான் நாட்டின் மலையேறும் பெண் ஒருவர் மலையில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.

மலையில் இருந்து விழுந்த பின் 36 வயதான கிகி வூ என்ற அந்த பெண் அவசர சேவைக்கு அழைப்பு விடுத்தபோதும் மோசமான காலநிலை காரணமாக மீட்பாளர்கள் அந்த இடத்திற்கு செல்ல தாமதம் அடைந்திருப்பதாக உள்ளூர் செய்திகள் கூறுகின்றன. தாழ்வெப்பநிலை காரணமாக அவர் உயிரிழந்திருப்பதாக நம்பப்படுகிறது.

உறைநிலை வெப்பநிலையில் கடந்த திங்கட்கிழமை அவரது உடல் மீட்கப்பட்டுள்ளது.

தாய்வானின் யூசானா தேசிய பூங்காவின் ஒரு மலைத்தொடரில் தனியாக பல நாள் அவர் பயணத்தில் ஈடுபட்டிருந்துள்ளார்.

18,000க்கும் அதிகமானவர்கள் பின்தொடரும் அவரது பேஸ்புக் பக்கத்தில் கடைசியாக கடந்த ஜனவரி 18 ஆம் திகதி மலை ஒன்றில் அவர் நின்றிருக்கும் புகைப்படம் ஒன்று பதிவிடப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...