'சிங்ஹ லோகேயே சிங்ஹயா' | தினகரன்

'சிங்ஹ லோகேயே சிங்ஹயா'

"நதீ... கங்கா... தரணயே.." பாடலை பாடிய சித்ரால் சோமபாலவின் புதிய மியூசிக் வீடியோ

இலங்கையின் புகழ்பெற்ற சிங்கள பாடகர் சித்ரால் சோமபாலவின் புத்தம் புதிய மியூஸிக் வீடியோ, கடந்த வாரம் (16) கொழும்பு சிற்றி சென்டரில் வெளியிட்டு வைக்கப்பட்டது.

சித்ரால் சோமபாலவின் தயாரிப்புக்களில் மிகப் பெரிய தயாரிப்பாகக் கருதப்படும் இது 7 ஆவது மியூசிக் வீடியோ ஆகும். 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்ட சித்ரால் சோமபாலவின் 'சிங்ஹ லோகேயே சிங்ஹயா' என்ற பாடலுக்காக இந்தப் புத்தம் பதிய மியூஸிக் வீடியோ தயாரிக்கப்பட்டுள்ளது.

பிரபல பாடலாசிரியர் கெலும் சிறிமாலினால் எழுதப்பட்டு, சித்ரால் சோமபாலவின் இசையமைப்பில் பாடப்பட்ட 'சிங்க லோகயே சிங்கயா" என்ற பாடல், Antswork Productions இற்காக சாலிய வீரசேகர தயாரித்துள்ளார். இது, இலங்கையின் இளம் சந்ததியினரை தமக்கும், தமது தேசத்திற்கும் பயனுள்ளவர்களாக, முன்னோக்கிச் செல்ல ஊக்குவிக்கும் நோக்கத்தில் தயாரிக்கப்பட்டதாகும்.

‘Find your Lion’அதாவது, 'உங்களில் மறைந்துள்ள சிங்கத்தைக் கண்டுபிடியுங்கள்" எனும் எண்ணக்கருவில் தனது நோக்கத்தை அடைந்துகொண்டு வெற்றியடையும் போது, ஒரே தேசமாக இலங்கையும் வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்லப்படும், என்பதை இந்தப் பாடல் மூலம் இலங்கையின் இளம் சந்ததியினருக்கு சரியான முறையில் கொண்டு சேர்க்க முடிந்துள்ளது.

சிங்கப்பூரில் வசிக்கும் சர்வதேச புகழ்பெற்ற வீடியோ தயாரிப்புப் பணிப்பாளரான அஸாத் உல் ஹக் உடன் இணைந்து சித்ரால் சோமபாலவினால் இப்பாடல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த மியூசிக் வீடியோ பிரதானமாக இரண்டு கதாபாத்திரங்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. கட்டடக்கலைஞர் ஒருவரின் முழுநேர அர்ப்பணிப்பில் ஒரு வீரராகும் நோக்கையும், சித்திரப் பாடம் கற்கும் ஒரு மாணவனின் டிரம்ஸ் வாத்தியக் கலைஞராகும் கனவையும் மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள 'சிங்ஹ லோகயே சிங்ஹயா" மியூசிக் வீடியோவின் இறுதியில் தனக்குள் காணப்படும் உண்மையான திறமையைக் கண்டுபிடித்து, அவர்கள் வெற்றியடையும் தருணத்தை மிகவும் உணர்ச்சிபூர்வமாக வெளிப்படுத்தியுள்ளது.

ஒரு கனவை நனவாக்கிக் கொள்ளும் போது ஏற்படக்கூடிய கஷ்டங்கள், துன்பங்கள், துயரங்களினால் துணிவை இழக்காது தன்னம்பிக்கையுடன் தைரியமாக இலக்கை நோக்கிப் பயணிக்க இலங்கையின் இளம் சந்ததியினரை ஊக்குவிப்பது 'சிங்ஹ லோகயே சிங்ஹயா" படைப்பின் நோக்கமாகும்.

இந்த மியூசிக் வீடியோ வெளியீட்டு வைபவத்தில் கருத்து வெளியிட்ட ‘சிங்ஹ லோகயே சிங்ஹயா’ பாடலின் பாடலாசிரியர் கெலும் சிறிமால், 'சிங்ஹ லோகயே சிங்ஹயா பாடலானது, பாடலைக் கேட்பவரை ஊக்குவிக்கும் தன்மை கொண்ட ஒன்றாகும். எமது நாட்டில் இதுவரை இடம்பெற்ற பல கலாசார முக்கியத்துவம் வாய்ந்த வைபவங்களின் போது இந்தப் பாடலை ஒலிபரப்பி, கலந்துகொண்ட இளம் சந்ததியினரை தைரியத்துடனும், குதூகலத்துடனும் வைத்திருக்க எம்மால் முடிந்துள்ளது.

நாம் இந்தப் பாடலை உருவாக்கி அதிக காலம் கடந்து விட்டாலும் கூட, இப்போது வெளியிடப்பட்டுள்ள இந்தப் புதிய மியூசிக் வீடியோ ஊடாக எமது இளம் சந்ததியினரை சிறந்த மனப்பாங்குடன் செயற்பட வைக்கும் என்று நான் எதிர்பார்க்கின்றேன்" என்று கூறினார்.

‘சிங்ஹ லோகயே சிங்ஹயா’ பாடல் பற்றிக் கருத்து வெளியிட்ட சித்ரால் சோமபால, “மாற்றமடைந்து வரும் உலக, பொருளாதார, சமூக, வாழ்க்கை முறையில், எமது நாட்டின் பெறுமதிகளைப் பாதுகாத்து, இலங்கையின் அபிவிருத்திக்காக இளம் சந்ததியினரின் செயற்பாட்டுடன் கலந்துகொள்ளவும் இப்போது காலம் கனிந்துள்ளது என்பதை இது வலியுறுத்துகிறது’ என்று கூறினார்.

அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், 'நாம் இந்தப் பாடலின் மூலம் இளைஞர் யுவதிகளின் கனவுகளை நனவாக்கிக்கொள்ள அவர்களை ஊக்குவிக்க முயற்சி செய்தோம். ரசித்த ஜினசேன, அஸாதுல் ஹக் மற்றும் Skyy Productions குழுவிற்கும் சாலிய வீரசேகர அவர்களுக்கும் நான் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கருத்தாழமிக்க மியூசிக் வீடியோவை உருவாக்கிக் கொடுத்த அஸாதுல் ஹக் போன்ற சர்வதேச புகழ்பெற்ற பணிப்பாளர் ஒருவரோடு பணியாற்றக் கிடைத்தமை எனக்குக் கிடைத்த ஒரு கௌரவமாகும்" என்றும் கூறினார்.

சித்ரால் சோமபால (Chity) இலங்கையின் ரொக் பாடகர் என்ற ரீதியில் hard rock மற்றும் heavy meta ஆங்கில சங்கீத முறைமைகளை பயன்படுத்தி தயாரிப்புக்களில் ஈடுபட்டுள்ள சர்வதேச புகழ்பெற்ற ஒருவராவார். ஐரோப்பாவின் புகழ்பெற்ற power metal இசைக்குழுவான Firewind, Power Quest, Avalon, Faro, Red Circuit மற்றும் Civilization One ஆகிய சர்வதேச சங்கீத அனுபவத்தை அவர் கொண்டுள்ளார்.

1998 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட 'நதீ கங்கா" பாடலுடன் இலங்கை ரசிகர்களிடையே மிகவும் பிரசித்தி பெற்ற சித்ரால் சோமபால, ஆவுஏ உடன் இணைந்து “Dreams of Fire" என்ற ஒலிம்பிக் தீம் பாடல் மூலம் அவர் மேலும் பிரசித்தியைப் பெற்றுக் கொண்டார். சித்ரால் சோமபால, மறைந்த முன்னாள் பிரபல பாடகர் மற்றும் திரைப்பட சங்கீத பணிப்பாளர் பி.எல்.ஏ மற்றும் பாடகி சித்ரால் சோமபால ஆகியோரின் புத்திரர் ஆவார்.


Add new comment

Or log in with...