95 கிலோ ஹெரோயினுடன் அமெரிக்கர் இருவர் உள்ளிட்ட ஐவர் கைது | தினகரன்

95 கிலோ ஹெரோயினுடன் அமெரிக்கர் இருவர் உள்ளிட்ட ஐவர் கைது

90 கிலோ ஹெரோயினுடன் அமெரிக்கர் இருவர் உள்ளிட்ட ஐவர் கைது-5 Arrested Including 2 US Nationalis with 90kg Heroin

ரூபா 1,080 மில்லியன் என மதிப்பீடு

சுமார் 95 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று வெளிநாட்டவர் உள்ளிட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொள்ளுப்பிட்டியில் உள்ள சொகுசு தொடர்மாடி குடியிருப்பு தொகுதியின், முதலாவது மாடியிலுள்ள வீடொன்றில் வைத்து குறித்த போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இதன்போது 29 மற்றும் 43 வயதான அமெரிக்காவைச் சேர்ந்த இருவரும், 45 வயதான ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒருவரும் என மூன்று வெளிநாட்டவர்களும் 41, 39 வயதுடைய ஹிக்கடுவ பிரதேசத்தைச் சேர்ந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் போதை தடுப்பு பிரிவு மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் அதிரடிப்படையினர் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் சுமார் 90 கிலோ கிராமுக்கு அதிகமான ரூபா 1,080 (ரூ. 108 கோடி) பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

பொலிஸ் போதை தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


Add new comment

Or log in with...