ஐ.நா. சுற்றாடல் மாநாட்டில் கலந்து கொள்ள ஜனாதிபதி சிங்கப்பூர் பயணம் | தினகரன்

ஐ.நா. சுற்றாடல் மாநாட்டில் கலந்து கொள்ள ஜனாதிபதி சிங்கப்பூர் பயணம்

மாநாட்டில் பிரதான உரை 

ஐ.நா. ஆசிய வலய சுற்றாடல்துறை அமைச்சர்கள் மற்றும் சுற்றாடல் நிறுவனங்களின் தலைவர்கள் மாநாட்டில் பிரதான உரை நிகழ்த்துவதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று (23) முற்பகல் சிங்கப்பூர் பயணமானார்.

இம்மாதம் 25ஆம் திகதி சிங்கப்பூர் மரினா பே சாண்ட்ஸ் கண்காட்சி மற்றும் மாநாட்டு மத்திய நிலையத்தில் நடைபெறவுள்ள இம்மாநாட்டில், 40 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி அந்நாடுகளின் சுற்றாடல்துறை அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர்

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தனது இந்த இரண்டுநாள் உத்தியோகபூர்வ பயணத்தில் சிங்கப்பூர் ஜனாதிபதி மற்றும் பிரதமரையும் சந்தித்து கலந்துரையாட உள்ளார்.


Add new comment

Or log in with...