கண் பார்வையற்ற பிள்ளைகளின் கோரிக்கையை நிறைவேற்றிய ஜனாதிபதி | தினகரன்

கண் பார்வையற்ற பிள்ளைகளின் கோரிக்கையை நிறைவேற்றிய ஜனாதிபதி

ஜனாதிபதியிடம் ‘ஆர்மோனியம்’ ஒன்றை பெற்றுத்தருமாறு கோரிய ருவன்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த கண்பார்வையற்ற மாணவி சஞ்சவி நயனதாரா மற்றும் அவரது கண்பார்வையற்ற சகோதரன் கிம்ஹான நயனஜித் ஆகியோரின் கோரிக்கையை நேற்று (22) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிறைவேற்றி வைத்தார்.

ஜனாதிபதியின் பதவிக்காலத்தின் நான்காண்டு நிறைவை முன்னிட்டு கடந்த 12 ஆம் திகதி ஜனாதிபதிக்கு ஆசி வேண்டி ருவன்வெல்ல லெவன்கம சதானந்த பிரிவெனா விகாரையில் நடைபெற்ற வைபவத்தில் கலந்துகொண்டபோது ஜனாதிபதியின் அருகில் வந்த இந்தப் பிள்ளைகள் தமது கோரிக்கையை முன்வைத்தனர்.

இதன்போது அப் பிள்ளைகளுக்கு வழங்கிய வாக்குறுதிகளுக்கமைய புதிய ஆர்மோனியம் ஒன்றையும் அவர்களது குடும்பத்தின் நலனுக்காக பத்து இலட்சம் ரூபாய் நிதி அன்பளிப்பையும் நேற்று (22) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி வழங்கினார்.

பிள்ளைகளின் பெற்றோருடன் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய இந்நிகழ்வில் பங்குபற்றினார்.


Add new comment

Or log in with...