திருமணம் சமீபத்திய நாகரிகம் என்றால் ஆடை அணிவது? | தினகரன்


திருமணம் சமீபத்திய நாகரிகம் என்றால் ஆடை அணிவது?

வைரமுத்துவை தாக்கிய எச்.ராஜா

திருமணம் என்பது சமீபத்திய நாகரிகம். அது இன்னும் 50,100 ஆண்டுகள்  மட்டுமே இருக்கும் என்று பேசிய கவிஞர் வைரமுத்துவை தாக்கிப்  பேசியிருக்கிறார் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா.

இயக்குநர் சேரன்  இயக்கத்தில் உருவாகும் திருமணம் என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு  விழாவில் பேசிய கவிஞர் வைரமுத்து, "திருமணம் என்பது ஒரு சமீபகாலத்து  நாகரிகம். ஆணுக்கும் பெண்ணுக்குமான இந்த உறவு என்பது பந்தப்படுத்தட்டு   சட்டபூர்வமாக வந்ததும் ஒரு அரசமைப்பு சட்டத்துக்குள் அகப்பட்டுக் கொண்டதும்  கொஞ்சம்தான். 3000 வருடமாகத்தான் தாலி, திருமணம் எல்லாம் இருக்கிறது. இது  இன்னும் 50, 100 ஆண்டுகள் இருக்கலாம். திருமணம் தனது கடைசி சுவாசத்தில்  வாழ்ந்து கொண்டிருக்கிறது.

மனித குலம் வேறு ஒரு நாகரிகத்தை நோக்கி  எட்டுவைக்கும். திருமணம் ஒரு முற்றுகையிடப்பட்ட கோட்டை. இதற்கு உள்ளே  இருப்பவர்கள் வெளியே வர தவிக்கிறார்கள்; வெளியே இருப்பவர்கள் உள்ளே வர  துடிக்கிறார்கள்" என்று பேசினார்.

அவரது இந்த கருத்து சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

இதனைக்  கண்டித்துள்ள எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், "ஆமாம்  அதற்கும்  சில  ஆண்டுகளுக்கு முன்பு  மனிதன்  உடை அணியாமல் காடுகளில் திரிந்தான்.  எதிர்காலத்தில் அப்படித்தான் திரிவானா மனிதன்? இதற்கு பெயர்தான் ஈ.வெ.ரா  effect ஓ!" என்று கிண்டல் செய்திருக்கிறார்.


Add new comment

Or log in with...