மஹிந்த பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் பணி பொறுப்பேற்பு | தினகரன்

மஹிந்த பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் பணி பொறுப்பேற்பு

மஹிந்த பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் பணி பொறுப்பேற்பு-Opposition Leader At Parliament Opposition Leader Office

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ இன்று (22) பாராளுமன்ற கட்டடத்தொகுதியிலுள்ள எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் தமது  பணிகளை ஆரம்பித்தார்.

இன்று முற்பகல் 2.00 மணியளவில் பாராளுமன்றத்தில் மூன்றாவது மாடியில் அமைந்துள்ள எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்திற்கு வருகை தந்த அவர் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

முதலாவது ஆவணத்தில் கையெழுத்திட்ட அவர் அதனை எதிர்கட்சி தலைவரின் செயலாளரிடம் கையளித்தார். இந்நிகழ்வில் ஐ.ம.சு.மு பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.

தான் எதிர்கட்சித் தலைவர் பதவியில் நீண்டகாலம் இருக்கப் போவதில்லை என தெரிவித்த மஹிந்த ராஜபக்‌ஷ, விரைவில் இந்த அறையில் இருந்து வெளியேறி அடுத்த நிலைக்கு செல்ல இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

ஐ.ம.சு.மு எம்.பிக்களுடன் சுவாரஸ்யமாக உரையாற்றுகையிலே அவர் இதனை தெரிவித்தார்.  

சுவரில் மாட்டப்பட்டிருந்த கடந்த கால எதிர்க்கட்சி தலைவர்களின் புகைப்படங்களை எதிர்க்கட்சித் தலைவருக்கு சுட்டிக்காட்டிய எம்.பிகள் ''உங்களின் படம் இங்கே ஒரு இடத்தில்தான் இருக்கின்றது. ரணில் விக்கிரமசிங்கவின் படம் 4 இடங்களில் இருக்கின்றது.

அவரின் படம் 5ஆவது தடவையாகவும் இங்கு மாட்டப்பட வேண்டுமென பிரார்த்திப்பதாக குறிப்பிட்டனர். ஜானக வக்கும்புர மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் இவ்வாறு கூறினர்.

பணிகளை ஏற்ற எதிர்க்கட்சித் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் அலுவலக அதிகாரிகளுடனும் எம்.பிக்களுடனும் சிறிது நேரம் உரையாடிய பின்னர் அங்கிருந்து சென்றார்.

(ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்)


Add new comment

Or log in with...