இந்தியாவுடன் ஏற்பட்ட தோல்விக்கு நானே பொறுப்பு - ஆரோன் பிஞ்ச் | தினகரன்

இந்தியாவுடன் ஏற்பட்ட தோல்விக்கு நானே பொறுப்பு - ஆரோன் பிஞ்ச்

இந்தியாவுடன் ஏற்பட்ட தோல்விக்கு நானே முழு பொறுப்பு எனவும் வேறு எவரையும் குறைகூற விரும்பவில்லை எனவும் ஆரோன் பிஞ்ச் கூறியுள்ளார்.  

இந்தியாவுக்கு எதிரான 3 ஒருநாள் போட்டித்தொடரை ஆஸ்திரேலியா 1-2 என்ற கணக்கில் இழந்தது. இந்த தோல்வி குறித்து அவுஸ்திரேலிய ஒருநாள் போட்டி அணியின் தலைவர் ஆரோன் பிஞ்ச் கூறியதாவது:- 

இந்தியாவுடன் ஏற்பட்ட தோல்விக்கு நானே முழு பொறுப்பு. வேறு எவரையும் குறைகூற விரும்பவில்லை. டெஸ்ட், ஒருநாள் தொடரில் எதிர்பார்ப்புக்கு மாறாக ஆடிய எனது செயல்பாடே தோல்விக்கு காரணம். எனது ஆடும் உத்தியில் தவறுகளை களைய வேண்டும். எனது ஆட்டத் திறமையை மேம்படுத்த வேண்டும். தலைவராக நான் சரியாக விளையாடவில்லை. 

தொடக்க வீரரான ஆரோன் பிஞ்ச் டெஸ்ட் தொடரில் 96 ஓட்டங்களும், ஒரு நாள் தொடரில் 26 ஓட்டங்களும் மட்டுமே எடுத்தார். ஒருநாள் போட்டியில் அவர் 3 முறையும், புவனேஷ்வர் குமார் பந்துவீச்சில்தான் ஆட்டம் இழந்தார்     


Add new comment

Or log in with...