Thursday, April 18, 2024
Home » போதைப்பொருள் தடுப்புக்காக 24 மணி நேர விசேட பிரிவு

போதைப்பொருள் தடுப்புக்காக 24 மணி நேர விசேட பிரிவு

- 45 பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரிகளுக்கு அறிவிக்க இலக்கங்கள்

by Rizwan Segu Mohideen
December 16, 2023 1:28 pm 0 comment

– நாளை முதல் பிரிவு செயற்படும்; நாளை முதல் அழைக்கலாம்
– அழைப்பவரின் இலக்கம் பதிவாகாது; தகவல்கள் பாதுகாக்கப்படும்

இலங்கை பொலிஸாரால் நாடு முழுவதையும் உள்ளடக்கிய போதைப்பொருள் சுற்றிவளைப்புகளுக்காக “யுக்திய” (நீதி/ நியாயம்) எனும் விசேட நடவடிக்கையொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸின் ஆலோசனையின் பேரில், பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் முழுமையான கண்காணிப்பின் கீழ் இதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் விநியோகஸ்தர்களின் வலையமைப்புகளை ஒடுக்கி அவர்களை கைது செய்து போதைக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதே இதன் முதன்மை நோக்கமாகும்.

இதற்காக, பொலிஸ் தலைமையகத்தில் விசேட நடவடிக்கை பிரிவொன்று நிறுவப்பட்டு, மாகாணங்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்களின் நேரடிக் கண்காணிப்பு மற்றும் அறிவுறுத்தலின் கீழ் 24 மணிநேரமும் செயற்பாடுகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

போதைப்பொருட்கள் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் பொலிஸ் தலைமையகத்தில் நிறுவப்பட்டுள்ள விசேட செயற்பாட்டு பிரிவுக்கு அல்லது ஒவ்வொரு பகுதிகளுக்கும் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு வழங்கப்பட்டுள்ள விசேட கையடக்கத்தொலைபேசி இலக்கங்களுக்கு தெரிவிக்கலாம்.

இந்த தொலைபேசிகளுக்கான அழைப்புகள் அழைப்பவரின் தொலைபேசி இலக்கத்தை காண்பிக்காது என்பதால் தகவல் அளிப்பவரின் தகவல் பாதுகாக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

குறித்த தொலைபேசி இலக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

அத்துடன் [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கும் தகவல்களை அனுப்பலாம்.

அத்துடன் இந்தச் செயல்பாடுகள் நாளை (17) முதல் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படுவதால், இந்தத் தொலைபேசி இலக்கங்கள் நாளை முதலே செயற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் நாளை (17) முதல் டிசம்பர் 23ஆம் திகதி வரையான முதல் வாரத்தில், இந்த “நீதி” வேலைத்திட்டம் தொடர்பில் இலங்கை பொலிஸ் திணைக்களம் விசேட கவனம் செலுத்தி, அதன் பின்னர் இத்திட்டத்தை தொடர திட்டமிடப்பட்டுள்ளது.

  • பொலிஸ் தலைமையக விசேட நடவடிக்கை பிரிவு – 0718598800
  • மின்னஞ்சல் முகவரி – [email protected]

1. கொழும்பு வடக்கு 071-8598801
2. கொழும்பு தெற்கு 071-8598803
3. கொழும்பு மத்திய 071-8598804
4. நுகேகொடை 071-8598805
5. கல்கிஸ்ஸை 071-8598806
6. கம்பஹா 071-8598807
7. நீர்கொழும்பு 071-8598808
8. களனி 071-8598809.
9. பாணந்துறை 071-8598810
10. களுத்துறை 071-8598811
11. மாத்தறை 071-8598812
12. தங்காலை 071-8598813
13 காலி 071-8598814
14. எல்பிட்டிய 071-8598815
15. கண்டி 071-8598816
16. மாத்தளை 071-8598817
17. தெல்தெனிய 071-8598818
18. கம்பளை 071-8598819
19. நுவரெலியா 071-8598820
20 ஹட்டன் 071-8598821
21. குருணாகல் 071-8598822
22. குளியாபிட்டி 071-8598823
23. நிகவெரட்டிய 071-8598824
24. புத்தளம் 071-8598825
25. சிலாபம் 071-8598826
26. அநுராதபுரம் 071-8598827
27. பொலன்னறுவை 071-8598828
28. கெபிதிகொல்லாவ 071-8598829
29. இரத்தினபுரி 071-8598830
30. எம்பிலிபிட்டிய 071-8598831
31. கேகாலை 071-8598832
32. சீதாவாக்கபுர 071-8598833
33. யாழ்ப்பாணம் 071-8598834
34. காங்கேசந்துறை 071-8598835
35. வவுனியா 071-8598836
36. மன்னார் 071-8598837
37. கிளிநொச்சி 071-8598838
38. முல்லைத்தீவு 071-8598839
39. மட்டக்களப்பு 071-8598840
40. அம்பாறை 071-8598841
41. திருகோணமலை 071-8598842
42. கந்தளாய் 071-8598843
43. பதுளை 071-8598844
44. பண்டாரவளை 071-8598845
45. மொணராகலை 071-8598846

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT