கிழக்கு ஆளுநரின் அழைப்பில் சவுதி நாட்டுத் தூதுவர் மட்டக்களப்பு விஜயம் | தினகரன்

கிழக்கு ஆளுநரின் அழைப்பில் சவுதி நாட்டுத் தூதுவர் மட்டக்களப்பு விஜயம்

கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் அழைப்பின் பேரில் இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் அப்துல் நாஸிர் உவைல் அல் ஹாரிதி தலைமையிலான உயர் மட்ட குழுவினர் இன்று காலை (22) விஷேட விமானம் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டனர்.

ஆளுநர் கலாநிதி ஹிஸ்புல்லாஹ்வின் அழைப்பின் பேரிலேசவூதி அரேபிய தூதுவர் தலைமையிலான குழுவினர் மட்டக்களப்புக்கு வருகைதந்துள்ளனர். இக்குழுவினரை ஆளுநர்வரவேற்று அழைத்துச் சென்றார்.

கிழக்கு மாகாணத்திலுள்ள கணவனை இழந்த பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கிலும் மாகாணத்தின் கல்வி, சுகாதாரம், மீன்பிடித்துறைகளை அபிவிருத்தி செய்யும் நோக்கிலும் இவ்விஜயம் அமைந்துள்ளது.

(அம்பாறை மாவட்ட குறூப் நிருபர்-அப்துல்கபூர்)


Add new comment

Or log in with...