உலகின் அழகான நாய் உயிரிழப்பு | தினகரன்

உலகின் அழகான நாய் உயிரிழப்பு

உலகின் அழகானது என்ற பெயரைப் பெற்ற பூ என்ற பொமரேனியன் நாய் தனது 12ஆவது வயதில் உயிரிழந்தது. 

அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் பூவின் பெயரால் ஆரம்பிக்கப்பட்ட சமூக வலைத்தளம் ஒன்றில் அதனை 17 இலட்சம் பேர் பின்தொடர்ந்து வருகின்றனர். 

அதன் வலைதளத்தில் பூவின் தினசரி சேட்டைகள் பதிவேற்றம் செய்யப்பட்டு வந்தன. இதனிடையே, அந்த நாய் வயது மூப்பு காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன் உயிரிழந்தது. இதையடுத்து பூவுக்கு அதிகமானோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

பூவின் சிறந்த நண்பனாக இருந்த பட்டி என்ற நாய் 2017 ஆம் ஆண்டு இறந்தது தொடக்கம் அது இதயப் பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வந்ததாக அதன் உரிமையாளர் குறிப்பிட்டுள்ளார்.   “பட்டி எம்மை விட்டு பிரிந்த பின் அதன் இதயம் நொறுங்கிவிட்டது என்று நாம் நினைக்கிறோம்” என்று அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.      


Add new comment

Or log in with...