வெலிகம, பொல்வத்த பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் காயம் | தினகரன்

வெலிகம, பொல்வத்த பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் காயம்

வெலிகம, பொல்வத்த பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் காயம்-Matara Weligama Polwatte Shooting-38 Yr Old Injured

மாத்தறை, வெலிகம பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வெலிகம, பொல்வத்த பிரதேசத்திலுள்ள பாலத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவர் மீது, மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச்சூடு நிகழ்த்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

காயமடைந்த நபர் மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வெலிகம பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதான எல்.எம். கிரிஷாந்த மஞ்சுள என்பவரே இச்சம்பவத்தில் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

சந்தேக நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையில் வெலிகம பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.


Add new comment

Or log in with...