நாடு முழுவதும் நான்கு மணி நேர சுற்றிவளைப்பு; 3,808பேர் கைது | தினகரன்

நாடு முழுவதும் நான்கு மணி நேர சுற்றிவளைப்பு; 3,808பேர் கைது

17,461 பொலிஸார் பங்கேற்பு 

சகல பொலிஸ் நிலையங்களையும் உள்ளடக்கியதாக நாடு முழுவதும் 4மணி நேரம் நடத்திய சுற்றிவளைப்பில் 3,808பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்புரையின்பேரில் நாடு முழுவதும் இச்சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

 19ஆம் திகதி இரவு 10மணி தொடக்கம் நேற்று (20) அதிகாலை 2மணி வரையிலான கடந்த 04 மணித்தியாலங்களுக்குள் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின்போதே பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இச்சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இச்சுற்றி வளைப்புக்காக நாடு முழுவதுமுள்ள பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றும் 17ஆயிரத்து 461பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். 

நாட்டில் இடம்பெறும் குற்றச் செயல்கள் மற்றும் வீதிப் போக்குவரத்து முறைகளில் இடம்பெறும் சீர்கேடுகளை குறைக்கும் வகையிலேயே இவ்விசேட சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

(லக்ஷ்மி பரசுராமன்) 


Add new comment

Or log in with...