இலங்கை –ஆஸி. டெஸ்டில் ரசிகர்களுக்கு அனுமதி இலவசம் | தினகரன்

இலங்கை –ஆஸி. டெஸ்டில் ரசிகர்களுக்கு அனுமதி இலவசம்

பிக்பேஷ் லீக் தொடரில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற சிட்னி தண்டர்ஸ் மற்றும் பிரிஸ்பேன் ஹீட்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டியை பார்வையிட வந்திருந்த ரசிகர்கள், இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதும் பகலிரவு டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட்டுகளை இலவசமாக பெற முடியும் என கிரிக்கெட் அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.

குயின்ஸ்லாந்தின் த கெப்பா மைதானத்தில் நடைபெற்ற சிட்னி தண்டர்ஸ் மற்றும் பிரிஸ்பேன் ஹீட்ஸ் அணிகளுக்கு இடையிலான பிக்பேஷ் லீக் போட்டியின் போது மைதான விளக்குகள் மின் பற்றாக்குறையினால் செயலிழந்திருந்தன. குறித்த விளக்குகளை சரிசெய்வதற்கு நேர தாமதமாகிய நிலையில் போட்டி இரண்டாவது இன்னிங்ஸில் மூன்று ஓவர்கள் மாத்திரம் வீசப்பட்ட நிலையில் கைவிடப்பட்டது.

இந்த நிலையில், போட்டியை முழுமையாக நடத்த முடியாததன் காரணமாக கிரிக்கெட் அவுஸ்திரேலியா, போட்டியை பார்வையிட வருகை தந்திருந்த ரசிகர்களுக்கு, இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் அதே மைதானத்தில் நடைபெறவுள்ள பகலிரவு டெஸ்ட் போட்டிக்கான அனுமதியை இலவசமாக வழங்க தீர்மானித்துள்ளது.


Add new comment

Or log in with...