4 வருடங்களின் பின்னர் நாட்டுக்கு பொறுப்பு கூறும் எதிர்க்கட்சித் தலைவர் | தினகரன்

4 வருடங்களின் பின்னர் நாட்டுக்கு பொறுப்பு கூறும் எதிர்க்கட்சித் தலைவர்

சகல சக்திகளையும் ஒன்றுதிரட்டி செயற்பாடு

நான்கு வருடங்களின் பின்னர் நாட்டுக்கு பொறுப்புக் கூறக்கூடிய எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் எதிர்க்கட்சி தலைமையலுவலகத்தில் அமரக்கிடைத்தமை மிக முக்கியமானதென தெரிவித்திருக்கும் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச இதுகாலவரை எதிர்க்கட்சி தலைவர் பதவி ஒரு பிரதேசத்திற்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டதாக சுட்டிக்காட்டினார். எதிர்காலத்தில் சகல சக்திகளையும் ஒன்றுதிரட்டி மக்கள் பிரச்சினைகள் குறித்து முன்னுரிமைக் கொடுத்து செயற்படவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பு மாக்கஷ்பெர்ணான்டோ மாவத்தையிலுள்ள எதிர்க்கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்றுபொறுப்புக்களை ஏற்றுக்கொண்ட அவர் இக்கருத்துக்களை வெளியிட்டார். முழு நாட்டிலுமுள்ள பிரச்சினைகளுக்கு தெளிவான யோசனைகளை முன்வைக்க கூடிய வகையில் செயற்பாடுகளை முன்னெடுக்கூடியதாகவும் சிங்கள, தமிழ், முஸ்லிம், பறங்கியர் உள்ளிட்ட சகல இனங்களினதும் பிரச்சினைகள் குறித்து நேரடியாக தலையிட நாம் தயாராகவிருக்கிறோம்.

படிப்படியாக ஜனநாயகம் அழிந்துபோகும் ஒரு நிலைமை இன்று நாட்டில் ஏற்பட்டுள்ளது. விவசாய துறை மோசமான சவாலுக்கு முகம் கொடுத்துள்ளது. இது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்துவதாக தெரியவில்லை. முக்கியமாக சேனா எனும் படைக்குழுவால் ஏற்பட்டிருக்கும் பாதகமான நிலைகுறித்து அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை. எனவேதான் நாட்டின் சகல சக்திகளையும் ஒன்றுதிரட்டி நாட்டுக்காக குரல்கொடுக்க தயார்படுத்திக்கொண்டிருக்கின்றோம்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் கெஹெலிய ரம்புக்வெல்ல, உதய கம்மன்பில, தினேஷ் குணவர்தன , வாசுதேவ நாணயக்கார, பேராசிரியர் திஸ்ஸ விதாரண, பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், சுசில் பிரேம ஜயந்த, காமினி லொக்குகே, டபிள்யூ. டி.ஜே. செனவிரத்ன உள்ளிட்ட பலரும் இங்கு கருத்து தெரிவித்தனர்.

 


Add new comment

Or log in with...