100 கிலோ வெடிமருந்து, 100 டெட்டனேட்டர்களுடன் நால்வர் கைது | தினகரன்

100 கிலோ வெடிமருந்து, 100 டெட்டனேட்டர்களுடன் நால்வர் கைது

100 கிலோ வெடிமருந்து, 100 டெட்டனேட்டர்களுடன் நால்வர் கைது-4 Arrested With 100kg Explosive at Wanathawilluwa-Puttalam

புத்தளம், வனாத்தவில்லு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லெக்டோ வத்தை பிரதேசத்தில் சுமார் 100 கிலோ கிராம் வெடிமருந்து மற்றும் 100 டெட்டனேட்டர்களுடன் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றவியல் விசாரணை திணைக்கள (CID) அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த சந்தேக நபர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

குறித்த வெடி மருந்து எவ்வகையானது என்பது தொடர்பில் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றவியல் விசாரணை திணைக்களம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளது. 


Add new comment

Or log in with...