Tuesday, April 16, 2024
Home » இலகு ரயில் திட்டத்தை ஆரம்பிக்க ஜப்பானுடன் பேச்சு:22 ஹெக்டயரில் திட்டம்

இலகு ரயில் திட்டத்தை ஆரம்பிக்க ஜப்பானுடன் பேச்சு:22 ஹெக்டயரில் திட்டம்

by sachintha
December 15, 2023 8:09 am 0 comment

மண் பரிசோதனை சாத்தியக் கூற்றாய்வுகள் நிறைவு

இலங்கையில் இலகு ரயில் திட்டத்தை விரைவில் ஆரம்பிக்க ஜப்பானுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் இதற்காக மாலபே வரையிலான மண் பரிசோதனைகள் மற்றும் முன் சாத்தியக்கூற்றாய்வுகள் நிறைவு பெற்றுள்ளதாகவும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் இத்திட்டத்துக்காக22 ஹெக்டயர் காணி கையகப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதுபற்றித் தெரிவித்த அமைச்சர்:

இலகு ரயில் திட்டத்தை ஆரம்பிப்பதற்கான பேச்சுவாரத்தைகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.இத்திட்டத்தை விரைவில் தொடங்குவதே அரசின் நோக்கம்.இலங்கை, ஜப்பானுக்டையில் நடைபெற்ற கலந்துரையா டலில் இத்திட்டத்தை மீள் மதிப்பீடு செய்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அடுத்த வருடத்தில் பொது வசதிகள் இடமாற்றம் மற்றும் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் மீண்டும் செயற்படுத்தப்படும்.

இலகு ரயில் திட்டத்துக்கான ஆரம்ப சாத்தியக்கூறு ஆய்வு நடத்தப்பட்டது. மாலபே முதல் கோட்டை வரையிலான கட்டுமானம் தொடர்பான விரிவான திட்டங்கள், ஒப்பந்த ஆவணங்கள், ஏல ஆவணங்கள் மதிப்பீடுகள் மற்றும் கண்காணிப்பு சேவைகளை வழங்க சர்வதேச ஆலோசனை நிறுவனம் ஒன்று நியமிக்கப்பட்டது. இதன் அடிப்படை விஷயங்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகை 120 மில்லியன் அமெரிக்க டொலர்கள்.

இப்பூர்வாங்க பணிகள் 2019 ஏப்ரலில் தொடங்கி 91 மாதங்களில் முடிக்கப்பட இருந்தது. இருப்பினும், 21 மாதங்களுக்குப் பிறகு, இத்திட்டத்தை இரத்து செய்ய அரசாங்கம் முடிவு செய்தது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT